»   »  மீனாட்சியான ஷர்மிலி

மீனாட்சியான ஷர்மிலி

Subscribe to Oneindia Tamil

ஷர்மிலி தனது பெயரை மீனாட்சி என்று மாற்றிக் கொண்டு மலையாளப் படங்களில் நடிக்கிறார்.

காசுமேல என்ற நிகழ்ச்சியை இலை டிவியில் நடத்தி வந்தார் ஷர்மிலி. எம்.டிவி, வி டிவி நிகழ்ச்சித்தொகுப்பாளினிகளைப் போல் டைட்டான உடைகளுடன் கை, கால்களை ஆட்டிக் கொண்டு நிகழ்ச்சியைத்தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சி ஹிட்.

சின்னத்திரையில் பாப்புலர் ஆனதால் பெரியதிரை இவரைக் கொத்திக் கொண்டு போனது. ஆர்.பி.செளத்ரி தனதுமகன் ஜீவாவுக்கு ஜோடியாக ஆசை ஆசையாய் படத்தில் அறிமுகப்படுத்தினார். படம் பிளாப். அடுத்து ஏவி.எம்புரொக்டஷன்ஸ் தயாரித்த அன்பே அன்பே படத்தில் ஷாமுக்கு ஜோடியாக நடித்தார். அதுவும் பிளாப்.

அதோடு ராசியில்லாத நடிகை என்ற முத்திரை குத்தி ஓரமாக உட்கார வைத்து விட்டது கோடம்பாக்கம். பிரெஸ்டீஜ்விஷயம் காரணமாக மீண்டும் சின்னத்திரை பக்கம் ஒதுங்க முடியவில்லை. வேறு வழியில்லாமல் பெயரை மீனாட்சிஎன்று மாற்றிக் கொண்டு மலையாளப் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.

காசி பட இயக்குனர் வினயன் இயக்கிய வெள்ளி நட்சத்திரம் படத்தில் பிருதிவிராஜூக்கு ஜோடியாக நடித்தார்.அதிர்ஷ்டம் பாருங்கள். படம் சூப்பர் ஹிட். இங்கே ராசியில்லாத நடிகை என்று ஒதுக்கப்பட்ட ஷர்மிலி அங்குராசியான நடிகையாகிவிட்டார்.

இப்போது காக்க கரும்பன், யூத் பெஸ்டிவல், ஜூனியர் சீனீயர் என கைகளில் வரிசையாக படங்கள்வைத்திருக்கிறார். இதற்கிடையே மீண்டும் தயாரிப்பில் குதித்துள்ள கே.டி.குஞ்சுமோன் ஷர்மிலியை தனது புதியபடத்துக்கு புக் செய்துள்ளார்.

மகன் எபியை வைத்து கோடீஸ்வரன் என்ற படம் எடுத்து கோடிகளை இழந்த குஞ்சுமோன் விட்டதை பிடிக்கமீண்டும் ஒரு படம் எடுக்கிறார். தமிழில் ரிஸ்க் எடுக்க விரும்பாத குஞ்சுமோன் இந்தப் படத்தை மலையாளத்தில்தயாரிக்கிறார். அவரது மகன்தான் ஹீரோ.

இந்தப் படம் மலையாளத்தில் ஹிட்டானால் அதன்பின்பு அதை ரீமேக் செய்து தமிழில் ரீ எண்ட்ரி செய்யும்திட்டமாம் குஞ்சுமோனுக்கு. அதனால் ஷர்மிலியும் இந்தப் படத்தை மிகவும் நம்பிக் கொண்டிருக்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil