»   »  சகதியில் புரண்ட ஷீலா

சகதியில் புரண்ட ஷீலா

Subscribe to Oneindia Tamil

கண்ணா படத்தில் சகதியில் புரண்டு உணர்ச்சிகரமாக நடித்துள்ளாராம் ஷீலா.

சகலகலாவல்லவன் படம் வந்தபோது பெரும் பரபரப்பாக அதில் இடம் பெற்ற ஒரு காட்சி பேசப்பட்டது. அதாவது கமல்ஹாசனும், வில்லனும் சண்டை போடும் காட்சி அது. வயலில் உள்ள சேற்றில் புரண்டு கமலும், வில்லனும் சண்டை போடுவார்கள். முழுக்க முழுக்க ஸ்லோ மோஷனில் இடம்பெற்ற அந்தக் காட்சியை, அக்காலத்து இளவட்டங்கள் சிலாகித்துப் பேசினார்கள்.

மாப்ளே, சகதிச் சண்டை சூப்பர்டா என்று கூறும் அளவுக்கு அது பிரபலமானது. அந்தப் படத்திற்குப் பிறகு, கொஞ்ச காலத்திற்கு வெளியான படங்களில் கண்டிப்பாக ஒரு சகதிச் சண்டை இடம்பெற்றது. அந்த அளவுக்கு சகலகலாவல்லவன் சகதிச் சண்டை ரொம்பப் பாப்புலர்.

அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்குப் பின்னர் முதல்வன் படத்தில் அர்ஜூன் சகதி கெட்டப்பில் வந்து சண்டை போட்டு அசத்தினார். இப்போது ஹீரோக்களுக்குப் போட்டியாக நடிகை ஷீலாவும் சகதிச் சண்டையில் குதித்துள்ளார்.

இளவட்டம் மூலம் நாயகியாக அறிமுகமான முன்னாள் பாப்பா ஷீலா, இப்போது முரட்டு நாயகியாக மாறியுள்ளார். கிளாமரில் பின்னி எடுப்பதால் ஷீலாவுக்கு நல்ல டிமாண்ட் உள்ளது.

சீனா தானா 001 என்ற படத்திலும், கண்ணா படத்திலும் நடித்து வரும் ஷீலா, கண்ணாவில் வித்தியாசமான காட்சியில் நடித்துள்ளார். அதாவது இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் உடம்பு முழுக்க சகதியுடன் நடித்துள்ளாராம் ஷீலா. படத்தில் இந்தக் காட்சி பேசப்படுமாம்.

இந்தக் காட்சிக்காக ஷீலா உடம்பில் நிஜமான சகதியைப் பூசினார்களாம். பிலிம்சிட்டியில் வைத்து நள்ளிரவில் இந்தக் காட்சியை படமாக்கியுள்ளனர்.

பொன்னிற மேனி கொண்ட ஷீலாவுக்கு, சகதியைப் பூசிக் கொண்டு நடித்ததால் உடம்பெல்லாம் அரிப்பெடுத்து விட்டதாம்.

ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போய் பலமுறை குளித்துத்தான் அரிப்பைப் போக்கினாராம். அப்படியும் அரிப்பு முழுமையாக போகவில்லையாம். இப்போதும் கூட ஆங்காங்கே சொரிந்தபடிதான் இருக்கிறாராம்.

நமக்கு புல்லரிக்குதய்யா!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil