»   »  தெலுங்கை உலுக்கும் ஷீலா

தெலுங்கை உலுக்கும் ஷீலா

Subscribe to Oneindia Tamil

தமிழில் கை நிறையப் படங்களுடன் இருக்கும் ஷீலாவுக்கு தெலுங்கிலும் மனம் நிறைய வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கிறதாம். சந்தோஷமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

சின்னப் பாப்பாவாக நடிக்க வந்த ஷீலா, வயசுக்கு வந்த பின்னர் இளவட்டம் படத்தில் கிளாமரில் றெக்கை கட்டிப் பறந்தார். இளவட்டம் அவருக்கு சரியான முதலீடாக அமைந்தது.

இளவட்டத்தில் ஷீலாவின் சில்லிட்ட கவர்ச்சியைப் பார்த்து பல தயாரிப்பாளர்களும், நான் முந்தி, நீ முந்தி ஓடி வந்தனர். தமிழில் வந்த சில வாய்ப்புகளை அப்போது ஏற்காத ஷீலா, தெலுங்கில் நல்ல டப்புடன் வந்த வாய்ப்புகளை ஏற்றார்.

இதனால் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிய கையோடு, தெலுங்கில் பிசியானார் ஷீலா. இந்த நிலையில்தான் தமிழில் சீனா தானா 001, வேதா ஆகிய படங்களில் நடிக்கும் வாய்ப்பு ஷீலாவுக்கு வந்தது.

இந்தப் படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் ஷீலா, சைடிலேயே தெலுங்கிலும் பிசியாக உள்ளார். ஹலே பிரேமிஸ்தாரா என்ற படத்தில் படு கிளாமராக பின்னி எடுத்துக் கொண்டிருக்கிறாராம் ஷீலா.

இதுதவிர பொம்மரிலு என்ற பிரமாண்ட வெற்றிப் படத்தை இயக்கிய பாஸ்கரின் அடுத்த படத்திலும் ஷீலா நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் எப்படியாவது நடித்து விட பல முன்னணி ஹீரோயின்கள் முண்டியடிக்கிறார்களாம். இருந்தாலும் ஷீலாவுக்கே அந்த வாய்ப்பு கிடைக்கும் என்று தெலுங்கு வட்டாரம் கூறி வருகிறது.

தனது கிளாமரால் தெலுங்கையும், நடிப்பால் தமிழையும் உலுக்கி எடுக்க முடிவு செய்துள்ளாராம் ஷீலா. தமிழில் நடிப்போடு கிளாமர் இருக்குமாம். தெலுங்கில் போனால் போகிறதென்று நடிப்பாராம், கிளாமருக்குத்தான் அங்கு முதல் முக்கியத்துவமாம்.

அடடா, என்னே ஒரு பாலிசி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil