»   »  பீமாவில் ஷெரீன் குத்து!

பீமாவில் ஷெரீன் குத்து!

Subscribe to Oneindia Tamil

எந்த வாய்ப்பும் இல்லாமல் நொந்து போய்க் கிடந்த ஷெரீன் இப்போது குத்தாட்டத்தில் குதித்துள்ளார்.

இந்தக் கால நடிகைகளுக்கு தொழிலில் துவண்டு போய் விடாமல் தொடர்ந்து கலக்க பல வாய்ப்புகள். முடிந்தவரை ஹீரோயினாக நடிப்பது, வாய்ப்பு குறைய ஆரம்பித்தால் சிங்கிள் பாட்டுக்கு ஜிங்கிள்ஸ் என்று கலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

ஹீரோயினாக ஒரு காலத்தில் வலம் வந்து கொண்டிருந்த விந்தியா சில படங்களில் குத்தாட்டம் ஆடினார். முன்னணியில் இருந்தபோதே, விஜய் படத்திற்காக நயனதாரா குத்தாட்டம் ஆடினார்.

இப்படி ஹீரோயின்கள் எல்லாம் குத்தாட்டம், ஒத்தையாட்டம் என மாறிக் கொண்டுள்ள நிலையில், அவர்கள் வரிசையில் லேட்டஸ்டாக சேர்ந்துள்ளார் ஷெரீன்.

கலக்கல் உயரம், காந்த கண்கள் என படு கெட்டப்பாக இருந்தும், ஷெரீனை ஒரு படமும் இல்லாமல் கைவிட்டு விட்டது கோலிவுட். இதனால் விளம்பரப் படங்களில் தலையைக் காட்டிக் கொண்டிருந்தார் ஷெரீன்.

அப்போது சிலர், குத்தாட்டத்திற்குத் தாவுங்கள், வேலையும் கம்மி, கஷ்டமும் கம்மி என்று தூண்டி விட்டனர். ஆனாலும் குத்தாட்டம் போட ஷெரீனுக்கு விருப்பமில்லை. இதனால் வந்த வாய்ப்புகளைத் தட்டிக் கழித்து வந்தார்.

ஆனால் இப்போது ஒரு படத்தில் குத்தாட்டம் போட ஒப்புக் கொண்டு ஆடியும் முடித்து விட்டாராம். அந்தப் படம் பீமா. விக்ரம், திரிஷாவின் முறுக்கல் நடிப்பில் உருவாகி வரும் பீமாவில், குத்தாட்டம் போட கூப்பிட்டபோது, யோசிக்காமல் சட்டென சரி என்று கூறி விட்டாராம்.

இத்தனை நாள் யோசித்தவர் எப்படி சட்டென்று ஒத்துக் கொண்டார் என்று பார்த்தால், விக்ரம் படம் என்பதாலும், பெரிய யூனிட் தயாரிக்கும் படம் என்பதாலும்தான் ஒத்துக் கொண்டு விட்டாரராம். அத்தோடு நல்ல டப்பு வேறயாம்.

தூத்துக்குடி அருகே கப்பல் மீது நடக்கும் வகையில் இந்தப் பாட்டை படமாக்கியிருக்கிறார்களாம்.

இன்னொரு நாயகன்-அப்ப, இனி ஷெரீன் முன்னாள் நாயகி!

Please Wait while comments are loading...