»   »  சிலு சிலுக்கும் ஷெரீன்

சிலு சிலுக்கும் ஷெரீன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

படு உற்சாகமாக மீண்டும் தமிழுக்கு வருகிறார் ஹெராயின் விழியழகி ஷெரீன்.

துள்ளுவதோ இளமை மூலம் பொடிப் பசங்களின் உள்ளங்களில் மசாலா மிக்ஸ் ஆக கலந்து கலக்கியவர் ஷெரீன். அவரது போதைக் கண்களின் அழகில் சொக்கி இளைய சமுதாயம் வழுக்கி விழுந்தது.

தமிழ் சினிமாவில் பெரிய ரவுண்டு அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட ஷெரீன், வேறு மார்க்கத்தில் புகுந்தார். காதலில் வீழ்ந்த அவர் அதனால் பட வாய்ப்புகளை இழந்தார்.

ஓரிரண்டு தமிழ்ப் படங்களில் நடித்த கையோடு அட்ரஸ் இல்லாமல் போனார். இடையில் அவருக்கும், அம்மாவுக்கும் இடையே தகராறு வேறு. இப்படியாக உருப்படியில்லாமல் போன ஷெரீன் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

காபி ஷாப் என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார் ஷெரீன். இப்படத்தின் பெயர் இப்போது வரிச் சலுகைக்காக உற்சாகம் என தூய தமிழில் பெயர் மாற்றமாகியுள்ளது.

இப்படத்தில் ஷெரீனுக்கு ஜோடி போடுபவர் நந்தா. படு பொலிவுடன், பச்சக் என காணப்படுகிறார் ஷெரீன். கூடுதல் அழகுடன் மீண்டும் வரும் ஷெரீன், இனிமேல் தமிழில் அதிக கவனம் செலுத்தப் போகிறாராம்.

எப்படி என்று கேட்டோம். இனிமேல் படங்களில் நடிப்பதில்தான் நான் கவனம் செலுத்தப் போகிறேன். தனிப்பட்ட விஷயங்களும், குடும்பப் பாசமும் எனது சினிமா கேரியரை பாதிக்காமல் பார்த்துக் கொள்வேன் என்கிறார்.

2வது ரவுண்டை அமர்க்களமாக ஆரம்பிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் படு ஊட்டமாக தன்னையே மாற்றிக் கொண்டுள்ளார் ஷெரீன். முன்பை விட கூடுதல் பொலிவும், பளபளப்பும் முகம் முதல் பாதம் வரை பளீரிடுகிறது.

சரி, படத்தோட கதை என்ன என்று இயக்குநர் ரவிச்சந்திரனிடம் கேட்டபோது, காதல் கல்யாணத்திற்கும், அரேஞ்ச்ட் கல்யாணத்திற்கும் என்ன வித்தியாசம். அதுதான் இந்தப் படத்தின் கதை என்றார்.இவர் ஏற்கனவே கண்ணெதிரே தோன்றினாள், மஜ்னு ஆகிய இரு படங்களை இயக்கியவர்.

படத்தின் ஆடியோ வெளியீடு ஞாயிற்றுக்கிழமை சென்னையில் நடந்தது. பப்பள உடையில் பல சினிமா பெண்கள் ஜிலுஜிலுவென நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர்.

படத்திற்கு இசை ரஞ்சித் பரோத். மொத்தம் 5 பாடல்கள். அதில் 3 பாடல்களை பத்திரிக்கையாளர்களுக்காப் போட்டுக் காட்டினர். 3 பாடல்களுமே படு ஜிலு ஜிலு. இந்தோனேசியாவின் புக்கெட் தீவில் வைத்து சுடச் சுட படமாக்கியுள்ளனர். காட்சிகளில் ஷெரீன் படு கிளுகிளுவாக இருக்கிறார்.

ஷெரீனின் துள்ளும் இளமையை அள்ளிப் பருக ரெடியாகிக்கோங்கோ!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil