»   »  புதிய சிக்கலில் ஷெரீன், குட்டி ராதிகா !

புதிய சிக்கலில் ஷெரீன், குட்டி ராதிகா !

Subscribe to Oneindia Tamil

தமிழ்ப் படங்களில் நடிக்கக் கூடாது என்று பெங்களூர்க் கிளிகளான ஷெரீன் மற்றும் குட்டி ராதிகாவுக்கு அங்குள்ள கன்னடதயாரிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்களாம்.

தமிழ் சினிமாவின் பிரமாண்டமான ஆதிக்கம் காரணமாக கர்நாடகாவில் கன்னடப் படங்கள் 25 நாள் ஓடுவதே ஆச்சரியமானவிஷயமாகப் போய் விட்டது. தமிழ், இந்தி, தெலுங்குப் படங்களின் ஆக்கிரமிப்பால் அரண்டு போயுள்ள கன்னடத் திரையுலகினர் பிறமொழிப் படங்களுக்குத் தடை விதித்து தங்களது எதிர்ப்பைக் காட்டி வருகின்றனர்.

நல்ல படங்களை எடுத்து போட்டியை எதிர்கொள்வதை விட்டு விட்டு, சினிமா ரசிகர்களுக்கு விருந்து அளிக்கும் தமிழ், இந்தி, தெலுங்குப்படங்களைத் தடுக்கப் பார்க்கும் கன்னடத் திரையுலகினரைப் பார்த்து இந்தியாவே சிரியோ சிரியென்று சிரிக்கிறது.

ஆனால் நாங்கள் பிடித்த முயலுக்கு மூணு கால்தான் ஒன்று ஒற்றைக் காலில் நிற்கும் கன்னடத் தயாரிப்பாளர்கள், இப்போது ஷெரீன், குட்டிராதிகா, சாயா சிங் உள்ளிட்ட கன்னட நடிகைகள் தமிழ், தெலுங்குப் படங்களில் நடிக்கக் கூடாது என்று எச்சரித்து வருகிறார்களாம்.

அதே நேரத்தில் கர்நாடகத்தைச் சேர்ந்த ரம்யாவுக்கு அரசியல் பின் பலம் உள்ளதால் (முன்னாள் முதல்வர் கிருஷ்ணா தாத்தா முறைவேண்டும்) அவருக்கு இந்த எச்சரிக்கை விடப்படவில்லையாம்.

இந்த தடை எச்சரிக்கைக் காரணமாக கன்னடத்து நடிகைகள் அதிர்ந்து போயுள்ளார்களாம். பெரும் டப்பு வரும் தமிழ், தெலுங்குப்படங்களில் நடிக்கக் கூடாது என்றால் அவர்களுக்கு அதிர்ச்சி வராமல் என்ன வரும்? இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசனையில்இவர்கள் ஆழ்ந்திருக்கிறார்களாம்.

இந்தத் தடை நடிகைகளுக்கு மட்டும்தானாம், அர்ஜூன், பிரகாஷ் ராஜ், ரமேஷ் அரவிந்த் போன்ற கன்னட நடிகர்களுக்கு தடைகிடையாதாம். அவர்கள் எங்கே வேண்டுமானாலும், நடித்து சம்பாதிக்கலாமாம்.

இந்தத் தடையை (எச்சரிக்கையை) தமிழக தயாரிப்பாளர்கள் ஒரு வரப் பிரசாதமாக எடுத்துக் கொண்டு தமிழர்களுக்காக எடுக்கும்படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைக்க முன் வர வேண்டும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil