»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

இவ்வளவு சீக்கிரத்தில் ஷெரீனுக்கு இறங்கு முகம் ஆரம்பிக்கும் என்று யாருமே நினைக்கவில்லை.

கையில் சான்ஸ் ஏதும் இல்லாததால் நகத்தைக் கடித்து, நகம் இல்லாததால், விரலையே கடிக்கும் அளவுக்குசோகத்தில் உள்ளார் ஷெரீன்.

இதனால் எந்த சான்ஸ் வந்தாலும் கபால் என பாய்ந்து பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.

பிரபுவை வைத்து எஸ் மேடம் என்ற படத்தை எடுத்த தயாரிப்பாளர் சமீபத்தில் ஷெரீனைத் தொடர்பு கொண்டார்.இதையடுத்து அவரை ஷெரீனே ஓடிப் போய் சந்தித்தார். என் படத்தில் நீ தான் ஹீரோயின் என்று தயாரிப்பாளர்சொல்ல சுவிட்சர்லாந்து பனிமலையில் மிதக்க ஆரம்பித்தார் ஷெரீன் (கனவில் தான்).

ஆனால், அவர் அடுத்து சொன்ன தகவல் தான் மலைச் சிகரத்தில் இருந்து கீழே குதித்தது தான் மாதிரி இருந்ததாம்ஷெரீனுக்கு.

ஹீரோ பிரபு என்றாராம்.

தலை லேசாக சுற்றினாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாத ஷெரீன் சரி சார் சொல்லிவிட்டு கிடைத்தஅட்வான்ஸை வாங்கிக் கொண்டு திரும்பியிருக்கிறார்.

இந்தப் படத்தின் பெயர் சபாஷ் சகலையாம். இயக்கப் போவது பி.எம். சுந்தர். பிரபுவுடன் சேர்ந்து டான்ஸ்எல்லாம் ஆடப் போகிறாராம் ஷெரீன்.

பாவம் ஷெரீன். பிரபுக்கு இணையான வயதான சத்யராஜின் மகன் சிபிராஜுடன் நடித்த ஷெரீன் இப்போதுபிரபுவுடன் ஜோடி சேர வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார். அடுத்து சத்யராஜுடன் ஜோடியா மேடம்?

களமிறங்கும் வாரிசுகள்:

இதுவும் இரண்டு ஓல்டு ஹீரோக்கள் பற்றிய செய்தி தான்.

தனக்கு அப்பா வயது வந்து விட்டதை ஒரு வழியாக உணர்ந்து விட்ட கார்த்திக், தனது மகன் கெளதமை விரைவில்களம் இறக்கவுள்ளார். சிபி ராஜ், தனுஷ், சிலம்பரசன் வரிசையில் அடுத்த வாரிசாக களம் இறங்கப் போவதுகார்த்திக்கின் மகன்.

வாலிப வயதைத் தொட்டு விட்ட கெளதமை, ஹீரோ ரேஞ்சுக்கு தயார் படுத்தி வந்தார் கார்த்திக். பயிற்சிக் காலம்முடிந்து விட்டதால், அடுத்து கோடம்பாக்கத்தில் இறக்கிவிடப் போகிறாராம் கார்த்திக்.

தன்னைப் போலவே தனது மகனும், காதல், ஆக்ஷன், நடிப்பு என பன்முகம் கொண்டவராக இருப்பார் என்கிறார்கார்த்திக்.

அதே போல டபுள் மீனிங் டயலாக் ஸ்பெஷலிஸ்ட்டான டைரக்டர்-கம்-நடிகர் பாக்யராஜ் தனது மகன்சோனுவையும் சினிமாவில் தள்ளிவிடப் போகிறாராம். கார்த்திக் மகனைப் போலவே சோனுவும் டான்ஸ், பைட்டிங்பயிற்சி எடுத்து வருகிறாராம்.

நடிப்புப் பயிற்சி தான் தேவையே இல்லையே. யார் இப்போவெல்லாம் நடிப்பை பாக்குறா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil