»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

துள்ளுவதோ இளமைக்குப் பின் அடுத்தடுத்து வந்த எந்தப் படமும் ஓடாததால், சான்ஸ் இல்லாமல் முடங்கி,சொந்த ஊரான பெங்களூருக்கே திரும்பிட்ட ஷெரீன் இப்போது விட்ட படிப்பை தொடர ஆரம்பித்துள்ளார்.

பெங்களூர் அம்பேத்கார் பல்கலைக்கழக கல்லூரியில் பி.ஏ. சைக்காலஜி படித்து வரும் ஷெரீன் காலை ஒன்பதுமணி முதல் மாலை நான்கு மணி வரை ரெகுலர் வகுப்புக்கு செல்கிறார். (கொடுத்து வைத்த கல்லூரி மாணவர்கள்!)

அதே நேரத்தில் மெட்ராசில் இவர் நியமித்துவிட்டுப் போயுள்ள மேனேஜரிடம் இருந்தோ, கோடம்பாக்கம்பி.ஆர்.ஓக்களிடம் இருந்தோ ஏதாவது கால் வருகிறதா என்று அவ்வப்போது செல்போனையும் பார்த்தபடிஇருக்கிறார். கன்னடத்திலும் பழைய, புதிய ஹீரோக்கள், டைரக்டர்களை அணுகி சான்ஸ் கேட்கிறார்.

இரண்டாவது நாயகி, ஒரு பாடலுக்கு ஆட்டம் என என்ன சான்ஸ் கிடைத்தாலும் ஓ.கேவாம். நடிக்கத் தயார்என்கிறார். சம்பளம் கூட கொடுப்பதைக் கொடுங்கள் என்று சொல்லும் ஷெரீனுக்கு இதுவரை முயற்சிபலனளிக்கவில்லை.

துள்ளுவதோ இளமைக்குப் பின் கிடைத்த படங்களை சரியாகத் தேர்வு செய்யாமல் விட்டது, சத்யராஜின் மகன்சிபிராஜுடனி தன்னை இணைத்துப் பேசி காதல் கிசுகிசு வந்தது ஆகியவையே தனது இறங்கு முகத்துக்குக் காரணம்என்று புலம்பிக் கொண்டிருக்கிறார் ஷெரீன்.

காலம் கடந்த ஞானத்தால் என்ன பயன்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil