»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் கைவசம் எந்த சான்சும் இல்லாததால் தனது ஹோட்டல் ரூமை காலி செய்துவிட்டு சொந்த ஊரானபெங்களூருக்கே போய்விட்டார் ஷெரீன்.

துள்ளுவதோ இளமை மூலம் தமிழுக்கு வந்த ஷெரீனுக்கு அடுத்து வந்த எந்தப் படமும் கைகொடுக்கவில்லை.சத்யராஜின் மகன் சிபிராஜுடன் நடித்த ஸ்டூடண்ட் நம்பர் ஒன் படம் பெரும் தோல்வியடைந்து. இதையடுத்துவிசில் வந்து காப்பாற்றும் என நினைத்தார். அதுவும் கைகொடுக்கவில்லை.

துள்ளுவதோ இளமை வெற்றி பெற்ற கையோடு தனுசுடன் அடுத்த படத்துக்கும் ஷெரீனை அழைத்தார்கள்.ஆனால், முதல் படத்தில் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களால் அதைத் தவிர்த்தார். இதையடுத்து தான்சோனியா அகர்வாலை அழைத்து வந்து காதல் கொண்டேன் எடுத்தார்கள். படம் ஹிட் ஆனதோடு,சோனியாவுக்கும் பல சான்ஸ்களைக் குவித்துவிட்டது.

இது ஷெரீனை மேலும் சோகத்தில் தள்ளியது. இந் நிலையில் ஷெரீனுக்கு பெரியப்பா வயதில் இருக்கும்பிரபுவுக்கு ஜோடியாக ஒரு சான்ஸ் கிடைத்தது. முதலில் அதிர்ந்தாலும், வேறு வழியில்லாததால் தலையில் அடித்துக்கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டார்.

ஆனால், பிரபுவோடு நடித்தால் அடுத்தாக சத்யராஜ், விஜயகாந்த் போன்றவர்களுடன் தான் நடிக்க சான்ஸ்கிடைக்கும். இளைய நடிகர்கள் யாருமே உடன் சேர்க்க மாட்டார்கள் என பல தரப்பில் இருந்தும் அட்வைஸ்வந்ததால் பிரபு படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸைத் திருப்பித் தந்துவிட்டார்.

ஆனால், வேறு சான்ஸ் ஏதும் கிடைக்கவில்லை. கையில் எந்தப் படமும் இல்லாமல் ஹோட்டல் ரூமுக்கு பில் கட்டிக்கொண்டிருப்பது வேஸ்ட் என்ற முடிவுக்கு வந்துவிட்ட ஷெரீன் ஊரைக் காலி செய்துவிட்டு பெங்களூருக்கேபோய்விட்டார்.

அங்கு கன்னடத்தில் ஏதாவது சான்ஸ் கிடைக்காதா என்று தன் பழைய தொடர்புகளை வைத்து முயன்றுகொண்டிருக்கிறார். கன்னடத்தில் இரு படங்களில் நடித்த நிலையில் தான் தமிழில் துள்ளுவதோ இளமைக்காகஅழைத்து வரப்பட்டார் ஷெரீன்.

இப்போது மீண்டும் கன்னடத்தில் சான்ஸ் தேடும் அதே நேரத்தில், தமிழிலும் தனக்கு சான்ஸ் தேட ஒரு மேனேஜரைநியமித்துவிட்டுத் தான் போயிருக்கிறார். என்ன சம்பளமாக இருந்தாலும் சரி, ஹீரோ மட்டும் கொஞ்சம்இளைஞராக இருந்தால் போதும் ஷெரீன் நடிப்பார் என்று சொல்லி அவருக்காக சான்ஸ் தேடிக் கொண்டிருக்கிறார்அந்த மேனேஜர்.

பெங்களூரில் சினிமா சான்ஸ் தேடுவதோடு, முன்பு செய்து கொண்டிருந்த மாடலிங்கிலும் மீண்டும் நுழைய முயன்றுவருகிறாராம் ஷெரீன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil