»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Posted By:
Subscribe to Oneindia Tamil

காதல், ரகசிய நிச்சயதார்த்தம், தாயை விட்டுப் பிரிந்து, காதலர் வீட்டில் வாசம், ஆக்ஸிடென்ட் என பல்வேறுபரபரப்புகளால் நொந்து போயிருந்த ஷெரீனுக்கு மீண்டும் நல்ல காலம் பிறந்திருக்கிறது.

காதலர் ரோகனுடன் தனக்குத் திருமணமாகிவிட்டதாக வந்த தகவல்களால் டென்சனில் இருந்த ஷெரீன்சென்னையிலேயே டேரா போட்டு, காதலர் சகிதமாக பேட்டிகள் தந்தார்.

நாங்கள் கல்யாணம் பண்ணிக்கப் போவது உண்மை, ஆனால், இப்போது இல்லை. எனக்குகல்யாணமாகிவிட்டதாக புரளி கிளப்புவது என் அம்மா தான்.

அவரை நம்பாதீர்கள் என்று குண்டு போட்டார்.

அத்தோடு சினிமா தயாரிப்பு நிறுவனங்களிலும் ஏறி, இறங்கி சான்ஸ் கேட்டு வருகிறார். கூடவே ரோகனையும்அழைத்து வரும் ஷெரீன் அவருக்கும் சேர்த்து சான்ஸ் கேட்டார்.

ஆனால், ஆண் துணையுடன் வந்ததால் பலதயாரிப்பு பார்ட்டிகள் ஷெரீனை கண்டுகொள்ள மறுத்துவிட்டன.

இதையடுத்து காதலரை கழற்றிவிட்டுவிட்டு தனியே போய் தயாரிப்பாளர்களை சந்திக்கும் வேலையில்இறங்கியுள்ளார் ஷெரீன்.

இதற்கு பலனும் கிடைத்துள்ளது. புகழ் என்ற புதிய படத்தில் ஹீரோயினாக புக்ஆகியிருக்கிறார்.

அத்தோடு காதல் திருடா என்ற படத்திலும் ஹீரோயினாக்கப்பட்டுளளார்.

இவருக்கு ஜோடி குணால். (என்னமாயமோ தெரியவில்லை, படங்கள் ஓடுதோ இல்லையோ குணாலுக்கு வருடத்துக்கு 2 படமாவதுகிடைத்துவிடுகிறது)

வழக்கமாக கவர்ச்சியைக் கொட்டும் காரெக்டர்கள் தான். கையில் சிகரெட்டோடும் வாயில் புகையோடும் வாய்ப்புகொடுத்த தயாரிப்பாளர்களுக்கு நன்றி சொல்லிவிட்டுத் திரும்பியிருக்கும் ஷெரீனின் சான்ஸ் வேட்டைதொடர்ந்து கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil