»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

என்னதான் சினிமாவில் நடித்தாலும், பி.எல். படித்து ஒரு வழக்கறிஞராக வேண்டும் என்பதே தன்ஆசை என்கிறார் ஷெரீன்.

பெங்களூரில் உள்ள அம்பேத்கார் கல்லூரியில் ஒரு வழியாக பி.யூ.சி. படிப்பை முடித்து விட்டஷெரீன், பி.ஏ. படிக்க முடிவெடுத்துள்ளார்.

பி.ஏவையும் முடித்த பின் பி.எல். படித்து ஒரு வழக்கறிஞராக ஆசைப்படுகிறார் ஷெரீன்.

"பத்திரிக்கை நிருபராக வேண்டும் என்றுதான் முதலில் ஆசைப்பட்டேன். ஆனால் ஒரு வக்கீலாகவேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்" என்ற ஷெரீன் கூறினார்.

இதற்கிடையே தமிழில் "விசில்" என்ற படத்தில் ஷெரீன் நடித்து வருகிறார். வழக்கம்போல் இந்தப்படத்திலும் படு கவர்ச்சியை அள்ளித் தெளித்துள்ள ஷெரீன், நடிப்பிலும் தன் திறமையைக் (?)காட்டியுள்ளாராம்.

அதேபோல் இப்படத்தில் சண்டைக் காட்சிகளிலும் கலக்கியுள்ளதாக ஷெரீன் கூறுகிறார். குதிரைச்சவாரி செய்தவாறே அட்டகாசமாக சண்டை போட்டுள்ளாராம் அவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil