»   »  திரும்பி வரும் ஷெரின்

திரும்பி வரும் ஷெரின்

Posted By:
Subscribe to Oneindia Tamil
Sherin

உற்சாகம் கொடுத்த வெற்றியால் தெம்பாகியுள்ள ஷெரின் மீண்டும் தமிழில் தீவிரமாக வாய்ப்பு தேட முடிவு செய்துள்ளாராம்.

பெரிய ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர் ஷெரின். ஆனால் வெறும் கிளாமர் வேலைக்கு ஆகாது என்பதை அவர் ரொம்ப நாளாகவே புரிந்து கொள்ளவில்லை. இதனால் நல்ல வாய்ப்புகள் கிடைக்காமல் அவதிப்பட்டார் ஷெரின்.

தமிழில் சுத்தமாக அவருக்கு வாய்ப்புகள் இல்லாத நிலையில் மும்பைக்கு ஷிப்ட் ஆகி விளம்பர படங்களில் நடித்து வந்தார். அவ்வப்போது தன்னைத் தேடி வந்த இந்தி, மலையாளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில்தான் உற்சாகம் பட வாய்ப்பு வந்தது. நந்தாவுடன் இணைந்து நடித்த இப்படத்தில் நடிக்கவும் செய்திருந்தார் ஷெரின்.

உற்சாகம் வெற்றி பெற்றதால் ஷெரினுக்கும் ஒரு பிரேக் கிடைத்துள்ளது. அவரைத் தேடி ஓரிரு பட வாய்ப்புகள் போயுள்ளதாம். அதில் நல்ல கதையாக பார்த்து தேர்வு செய்து நடிக்கப் போகிறாராம்.

மேலும் தமிழில் தனது வேட்டையை தீவிரப்படுத்தும் ஐடியாவும் ஷெரினிடம் உள்ளதாம். இதனால் மும்பையிலிருந்து சென்னைக்கு ஜாகையை ஷிப்ட் செய்யலாமா என்றும் யோசித்து வருகிறாராம். விரைவில் சென்னைக்கு இடம் பெயர்ந்து, வாய்ப்புகளைத் தேடும் முயற்சியைத் தீவிரப்படுத்தப் போகிறாராம் ஷெரின்.

திரும்பி வரும் முயற்சி திருப்பம் தரட்டும்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil