Don't Miss!
- Finance
வேலை வாய்ப்பினை அதிகம் உருவாக்கும் துறைகளில் PLI கவனம் செலுத்தலாம்.. பட்ஜெட்டில் எதிர்பார்ப்பு!
- News
தேசிய ஜனநாயக முற்போக்கு பணிமனை.. புதிய பெயர் வைத்த எடப்பாடி.. அப்போ பாஜக? என்னங்க இது.. குழப்புதே!
- Technology
BSNL சூப்பர் ரீசார்ஜ்: மாதம் ரூ.184 தான் செலவு 395 நாளுக்கு வேலிடிட்டி.! மாஸ் ஆன பிளான் இதான்.!
- Automobiles
ஃப்ரீனாலும் இந்த 5 ரயில்கள்ல மட்டும் போயிடாதீங்க... போனவங்க எல்லாம் கழுவி கழுவி ஊத்துறாங்க!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
பிகினி போட்டோ கேட்ட ரசிகர்.. வீடியோ மூலம் பதிலடி கொடுத்த ஷெரின்!
சென்னை : நடிகை ஷெரின் தனுஷுடன் துள்ளுவதோ இளமை படத்தில் நடித்து கோலிவுட்டில் சூப்பரான என்ட்ரி கொடுத்திருந்தார்.
தொடர்ந்து விசில் படத்தில் வில்லியாக நடித்து அதிரடி கிளப்பினார். ஆனால் இவையெல்லாம் அவருக்கு பெரிய அளவில் வாய்ப்புகளை பெற்றுத் தரவில்லை.
இதையடுத்து நடிப்பிலிருந்து விலகினார். மீண்டும் பிக்பாஸ் மூலம் நிகழ்ச்சிமூலம் தற்போது களத்தில் இறங்கியுள்ளார்.
“தி லெஜண்ட்“ திருவிழா.. ஜூலை 28ஆம் தேதி விடுமுறை..அண்ணாச்சி படத்திற்கு அடித்தது ஜாக்பாட்!

நடிகை ஷெரின்
நடிகை ஷெரின் தனுஷின் முதல் படத்திலேயே அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். இவர்கள் இருவரும் இந்தப் படத்தில் அறிமுகமாகினர். இந்தப் படம் சிறப்பான வரவேற்பை ரசிகர்களிடையே பெற்றது. தொடர்ந்து அதிகமான படங்களில் ஷெரின் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

வில்லியாக நடித்து அதிரடி
தொடர்ந்து விசில் படத்தில் வில்லியாகவும் நடித்து அதிரடி கிளப்பினார் ஷெரின். அந்த காலக்கட்டத்திலேயே இமேஜ் பார்க்காமல் வில்லியாக நடித்தவர் இவர். இந்தப் படமும் சிறப்பாகவே இருந்தது. நடிப்பில் மிரட்டினார். ஆனாலும் இவருக்கு கோலிவுட்டில் அதிகமான பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

பிக்பாஸ் மூலம் ரீ-என்ட்ரி
தொடர்ந்து நடிப்பதில் இருந்து விலகிய ஷெரின் நீண்ட காலங்களுக்கு பிறகு கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார். இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் கிடைத்தனர். நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்தபோது மிகவும் குண்டாக, ஷெரினா இவர் என்று கேட்கும்படியாக இருந்தார்.

உடல் எடையை குறைத்த ஷெரின்
தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுக் கொண்டே, தன்னுடைய உடல் எடையையும் கணிசமாக குறைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்பும், உடலை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டு அதில் வெற்றியும் கண்டார். தன்னுடைய உடலை சிறப்பாக குறைத்து ஸ்லிம் ஆனார்.

பிகினி புகைப்படம் கேட்ட ரசிகர்
தற்போது பழைய ஷெரினாக மாறியுள்ளார். தொடர்ந்து ரசிகர்களை கவரும் வகையில் சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவை அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்நிலையில் ஷெரினின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவர் அவரது பிகினி புகைப்படத்தை கேட்டு கமெண்ட் செய்திருந்தார்.

ரசிகர்கள் பாராட்டு
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் வீடியோ ஒன்றை ஷெரின் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கருப்பு நிற மேலாடையை போட்டுக் கொண்டுவரும் ஷெரின், அதை கழட்டி வீசுகிறார். பிகினியில்தான் வருகிறாரோ என்று அனைவரும் எதிர்பார்க்கும்போது, உள்ளே அவர் போட்டிருக்கும் சர்ட்டில் பிகினியின் புகைப்படம் காணப்படுகிறது.