»   »  பல் பிடுங்கும் ஷெரீன்

பல் பிடுங்கும் ஷெரீன்

Subscribe to Oneindia Tamil

தனது அழகின் ஒரு அங்கமாக இருந்த தெத்துப் பல்லை பிடுங்கப் போகிறாராம் ஷெரீன்.

தமிழ் சினிமாவில் தெத்துப் பல் அழகிகளுக்கு எப்போதும் நல்ல வரவேற்பு இருக்கும். முதலில் ரேவதி, பின்னர்சித்தாரா, அவருக்குப் பிறகு மீனா என தெத்துப் பல் அழகிகள் தமிழ் சினிமாவில் கோலோச்சினர்.

தனது முதல் படமான துள்ளுவதோ இளமையில், குட்டைப் பாவடையும், முத்தக் காட்சிகளும் என சூடு கிளப்பியஷெரீனுக்கும் தெத்துப்பல்தான்.

தமிழில் இவர் பெரிதாக ஒரு ரவுண்டு வருவார் என எல்லாரும் எதிர்பார்த்தனர். ஆனால் அவரே தன் தலையில்மண்வாரிப் போட்டுக் கொண்டார். அம்மாவுடன் சண்டை, காதலருடன் தனிக் குடித்தனம் என இவர் பண்ணியரவுசுகளால் கோலிவுட்டில் இவரது பெயர் கெட்டது.

இதனையடுத்து வாய்ப்புகளும் கெட்டது. இதனால் மனம் நொந்த ஷெரீன் முதல் வேலையாக தனது காதலைத்தலை முழுகினார். அடுத்து அம்மாவுக்குப் பச்சைக் கொடி காட்டினார்.

கம்பெனி, கம்பெனியாக வாய்ப்புக்காக ஏறி இறங்கினார். ஆனால் வாய்ப்புகள் பெயரவில்லை. இனியும் கைக்காசுபோட்டு ஹோட்டலில் தங்கியிருந்தால், திருவோடுதான் எடுக்க வேண்டி வரும என்பதை உணர்ந்து பெங்களூருக்குமூட்டை கட்டினார்.

அங்கு ஒரு கல்லூரியில் சேர்ந்து பி.காம். படிக்கப் போவதாக தகவல் வந்தது.

இந் நிலையில பல் வரிசை சரியில்லை, அதனால் தான் வாய்ப்புக்கள் இல்லை என்று யாரோ சொல்லி வைக்க,அதை நம்பி ஷெரின் பல்லைப் பிடுங்க முடிவு செய்துள்ளாராம். இதற்காக பிரபல பல் டாக்டர் ஒருவரிடம்ஆலோசனை கேட்டுள்ள ஷெரீன் விரைவில் பல்லைப் பிடுங்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil