»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

சரவெடியாய் வெடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ஷெரின் புஸ்வானமாகி விட்டார்.

துள்ளுவதோ இளமை என்ற அடல்ட்ஸ் ஒன்லி படத்தில் தனுசுடன் அறிமுகமானார் ஷெரின்.

பார்வையாலேயேரசிகர்களுக்கு போதை ஏற்றினார். பத்திரிக்கைகள் தாறுமாறாகக் கிழித்தும், படம் அமோக வெற்றி பெற்றது.

வெற்றிப் பட நாயகி என்பதால், பெரிய அளவில் வருவார் என்று ஷெரின் பற்றி பேசப்பட்டது.

ஆனால் அடுத்தவந்த படங்கள் எல்லாம் ஃபிளாப்.

காதலருடன் சேர்ந்து சுற்றத் தொடங்கியதால், "தனிக் கட்டை"களைப் பார்த்து போகத் தொடங்கினர்தயாரிப்பாளர்கள். ஹீரோக்களும் ஷெரீனைக் கண்டு கொள்ளவில்லை.

படமே இல்லாமல் ஓய்ந்து போய்க் கிடந்த ஷெரினைக் கூப்பிட்டு தனது வீராசாமி படத்தில் கவர்ச்சி வாய்ப்பைவழங்கியுள்ளார் அந்தக்கால அஷ்டாவதானி டி.ராஜேந்தர்.

நடிப்புக்கு வாய்ப்பு இல்லாவிட்டாலும் பஞ்சமில்லாமல் கவர்ச்சி காட்ட நல்ல வாய்ப்பு உள்ளதாம். இதனால்வாய்ப்பை கப் எடுத்து பிடித்துக் கொண்டுவிட்டார் ஷெரீன்.

டி.ஆர். படம் என்றாலே இந்தத் தலைமுறை சினிமா ரசிகர்கள் தெறித்துக் கொண்டு ஓடுகிறார்கள். தமிழ் சினிமாவைகமல், மணிரத்னம், பாலா ஆகியோர் எங்கேயோ கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்; இவர் இனியும், என்பேரு வீராச்சாமி, என்னை அடிக்க ஆளிருந்தா காமி என்ற வசனங்களால் ரசிகர்களைக் கொல்வதுதான் காரணம்.

அத்தகைய வசனங்களையும், தாய்- தங்கைப் பாசப் பிணைப்பு சம்பந்தமான காட்சிகளையும் போன தலைமுறைரசித்தது. இதைப் புரிந்து கொண்டதாலோ என்னவோ, வீராச்சாமி படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது, தந்தைக்கேநோ சொல்லிவிட்டாராம் சிம்பு.

லேட்டஸ்ட் தலைமுறையின் டேஸ்டை உணர்ந்து வீராசாமி படத்தை எடுத்தால் டி.ஆர் போடப் போகும்பணத்துக்கும், படத்தை நம்பியிருக்கும் ஷெரீனுக்கும் நல்லது என்கிறது கோடம்பாக்கம்.


இந்தப் படம் தவிர குணாலுடன் காதல் திருடா என்ற படத்திலும் நடித்து வருகிறார் ஷெரீன். இந்தப் படம் நீண்டநாட்களாக தயாரிப்பில் உள்ளது. அதேபோல இவர் நடித்த புகழ் என்ற படம் பெட்டியில் தூங்கிக்கொண்டிருக்கிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil