»   »  பேயை வணங்கிய ஷில்பா!

பேயை வணங்கிய ஷில்பா!

Subscribe to Oneindia Tamil

பிக் பிரதர் நாயகி ஷில்பா ஷெட்டி கர்நாடக மாநிலத்தில் உள்ள தனது சொந்த ஊரில் பேயை வணங்கும் விழாவில் கலந்து கொண்டு பய பக்தியுடன் பேயை வணங்கினார்.

லண்டன் பிக் பிரதர் நிகழ்ச்சிக்கு முன்பு ஷில்பாவைக் கண்டுகொள்ள ஒரு நாதியும் கிடையாது. ஆனால் அந்த நிகழ்ச்சியில் அழுது, புலம்பி வெற்றி பெற்றாலும் பெற்றார், அவரைப் பற்றிய செய்திகளுக்குப் பஞ்சமே இல்லாமல் போய் விட்டது.

சமீபத்தில் டெல்லியில் நடந்த லாரி டிரைவர்களுக்கான எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷில்பாவை ஹாலிவுட் நடிகர் ரிச்சர் கெரே இறுக்கி அணைத்து முகத்தில் மாறி மாறி உம்மா கொடுக்கப் போக அது பெரும் சர்ச்சையைக் கிளப்பி விட்டது.

இந்நிலையில் கர்நாடகாவில் உள்ள உடுப்பி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார் ஷில்பா.

தனது தாய் பிறந்த ஊரான நிடோடி கிராமத்துக்கு சென்று அங்கு நடந்த பூத கொல்லா என்ற பழமையான பேயை வணங்கும் சடங்கில் கலந்து கொண்டார் ஷில்பா.

பூத கொல்லா என்பது துளு பேசும் சமூகத்தினரின் பழமையான சடங்கு, இதில் பேயை போல் வேடமிட்டு வருபவர் பக்தர்களின் குறையை கேட்டு அவர்களுக்கு ஆறுதல் கூறுவார். இந்த நிகழச்சியில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஷில்பா,

பேய் வணங்கும் சடங்குக்கான ஏற்பாடுகள் பிக் பிரதர் நிகழச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார் ஷில்பா.

பெண் என்றால் பேயும் இறங்கும் என்பார்கள். ஷில்பாவோ ஒரு அழகிய பிசாசு. பேய் அருள் தந்திருக்குமா ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil