»   »  ஜேம்ஸ் பாண்ட் நாயகி ஷில்பா?

ஜேம்ஸ் பாண்ட் நாயகி ஷில்பா?

Subscribe to Oneindia Tamil

ஜேம்ஸ் பாண்ட் படத்தில் ஜேம்ஸ் பாண்ட்டின் கவர்ச்சிமிகு நாயகியாக ஷில்பா ஷெட்டியை நடிக்க வைக்க பாண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் முயற்சித்து வருகிறது.

லண்டன் டிவியின் பிக் பிரதர் நிகழ்ச்சியில் வென்றதன் மூலம் உலக அளவில் பாப்புலராகி விட்டார், உள்ளூரில் மார்க்கெட் இழந்த ஷில்பா ஷெட்டி.

மிஸ் யுனிவர்ஸ், மிஸ் வேர்ல்ட் அழகிகளுக்கு நிகரான செல்வாக்கு ஷில்பாவுக்கு தற்போது கிடைத்துள்ளது. பாலிவுட்டில் வெற்றி பெற முடியாத ஷில்பாவைத் தேடி தற்போது ஹாலிவுட் பட வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன.

இந்த நிலையில் ஜேம்ஸ் பாண்ட் படத்தில் நடிக்கும் அரிய வாய்ப்பும் ஷில்பாவைத் தேடி வந்து கொண்டிருக்கிறது.

ஜேம்ஸ் பாண்ட் படங்களைத் தயாரிக்கும் பட நிறுவனம் 23வது பாண்ட் படத்தைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது. முதல் கட்டமாக நடிகர், நடிகைகளைத் தேர்வு செய்யும் பணி தொடங்கியுள்ளது.

டேணியல் கிரேக்தான் பாண்ட் வேடத்தில் நடிக்கவுள்ளார். அவர் நடிக்கும் 2வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் பாண்ட்டுக்கு ஜோடியாக, அவரது நாயகியாக ஷில்பாவை நடிக்க வைக்கலாமா என்ற யோசனையில் பாண்ட் படத் தயாரிப்பு நிறுவனம் யோசித்து வருகிறது.

ஷில்பாவை இந்த ரோலில் நடிக்க வைப்பதன் மூலம் ஆசியாவில் பாண்ட் படத்திற்கு நல்ல விளம்பரமும், வசூலும் கிடைக்கும் என்பது தயாரிப்பாளர்களின் திட்டம்.

பாண்ட் படத்தில் நடிக்க ஷில்பாவும் ஆர்வமாக உள்ளாராம். இதுதொடர்பாக படத் தயாரிப்பு நிறுவனத்துடன் அவர் ரகசியமாக பேசியுள்ளார். ஷில்பாவின் அழகு, அட்டகாச உயரம், அவருக்குக் கிடைத்துள்ள பாப்புலாரிட்டி ஆகியவையே ஷில்பாவைத் தேடி பாண்ட் பட வாய்ப்பு வந்துள்ளதற்கு முக்கியக் காரணம் என்று கூறப்படுகிறது.

ஷில்பா பாண்ட் படத்தில் நடித்தால், பாண்ட்டுக்கு ஜோடியாக நடிக்கும் முதல் இந்திய நடிகை என்ற பெருமை அவருக்குக் கிடைக்கும்.

விரைவில் பிகினி உடையில் பாண்ட்டுடன் பட்டையைக் கிளப்புவார் ஷில்பா என்று பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil