»   »  'டப் ' ஆகும் ஷில்பா கிளாமர் !

'டப் ' ஆகும் ஷில்பா கிளாமர் !

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shilpa Shetty
ஷில்பா ஷெட்டி ரொம்ப காலத்திற்கு முன்பு தென்னிந்திய மொழிகளில் கவர்ச்சிகரமாக நடித்த பல படங்களை தூசு தட்டி எடுத்து இந்தியில் டப் செய்து வெளியிட ஆரம்பித்துள்ளனர். இதனால் 'பிக் பிரதரால்' சர்வதேசப் புகழுடன் உலா வரும் ஷில்பா டென்ஷனாக உள்ளாராம்.

ரொம்ப காலமாக இந்தியா சினிமாவில் உலா வந்தும் கூட கிடைக்காத புகழும், பெயரும், பரபரப்பும் லண்டன் டிவி நடத்திய பிக் பிரதர் மூலம் ஷில்பாவுக்கு கிடைத்தது.

இதையடுத்து ஓவர் நைட்டில் ஐஸ்வரயா ரேஞ்சுக்கு பாப்புலராகி விட்டார் ஷில்பா. ஷில்பாவுக்குக் கிடைத்துள்ள இந்தப் புதிய செல்வாக்கைப் பயன்படுத்தி துட்டு திரட்ட திட்டமிட்ட சில தயாரிப்பாளர்கள், ரொம்ப காலத்திற்கு முனபு ஷில்பா கவர்ச்சிகரமாக நடித்த பல தென்னிந்திய மொழிப் படங்களை டப் செய்து வெளியிட கிளம்பியுள்ளனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் தாய் மொழியான கன்னடத்தில் நடித்த படம் ஆட்டோ சங்கர். படு கிளாமராக இதில் அவர் நடித்திருந்தார். மேலும், பொம்பள தாதா வேடத்திலும் அவர் அசத்தியிருந்தார். படு பயங்கர தாதாவாக வலம் வரும் ஷில்பா, ஆட்டோ டிரைவர் ஒருவரைக் காதலித்து பின்னர் திருந்துவதாக அந்தப் படத்தின் கதை.

முழுக்க ஷில்பாவின் கவர்ச்சி நிறைந்திருந்த இப்படம் கன்னடத்தில் ஓஹோவென ஓடியது. இந்தப் படத்தை இப்போது ஷில்பா தி டான் என்ற பெயரில் டப் செய்துள்ளனராம். விரைவில் இப்படம் மும்பையில் ரிலீஸாகவுள்ளது.

இதைப் பார்த்த மேலும் சில தயாரிப்பாளர்கள், ஷில்பாவின் பிற மொழி கிளாமர் படங்களையும் டப் செய்து வெளியிட கிளம்பியுள்ளனராம். இதனால் ஷில்பா ஷெட்டி டென்ஷனாகியுள்ளாராம்.

ஷில்பா தமிழில் நடித்த மிஸ்டர் ரோமியோ கூட 'நல்ல ' கிளாமருடன் வந்த படம்தான். அதையும் கூட டப் பண்ணலாமே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil