Don't Miss!
- Lifestyle
ரிஷபம் செல்லும் செவ்வாயால் அடுத்த 2 மாதம் இந்த 6 ராசிகளுக்கு ராஜயோகம் அடிக்கப் போகுது...
- News
மேற்கு வங்கம்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி
- Automobiles
ராயல் என்பீல்டு கிளாசிக் 350-ஐ காட்டிலும் புதிய ஹண்டர் 350 எந்த அளவிற்கு சிறந்தது? ஒற்றுமைகள் & வேற்றுமைகள்...
- Finance
மும்பையில் மிகவும் காஸ்ட்லியான வீடுகளின் சொந்தக்காரர்கள் இவர்கள் தான்..!
- Technology
இரண்டு அட்டகாசமான Vivo ஸ்மார்ட்போன்களுக்கு நம்பமுடியாத விலைகுறைப்பு.!
- Education
ஹாய் சிவகங்கை கேர்ள்ஸ்... உங்களுக்கு குஷி செய்தி…!
- Sports
இது வேற லெவல்.. வாள்வீச்சு போட்டியில் வீர தமிழச்சி சாதனை.. 2வது முறையாக தங்கம் வென்ற பவானி தேவி
- Travel
வால்பாறை ஏன் ‘தி செவன்த் ஹெவன்’ என அழைக்கப்படுகிறது – காரணங்கள் இதோ!
சீக்கிரமே ஹீரோயினா என்ட்ரி கொடுக்கப் போகும் ஷிவானி நாராயணன்.. அந்த படத்துக்கு டப்பிங் ஓவராம்!
சென்னை: சின்னத்திரை பிரபலமான ஷிவானி நாராயணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டே ஏகப்பட்ட ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்தார்.
கமல்ஹாசனின் ஃபேவரைட் போட்டியாளரான ஷிவானிக்கு விக்ரம் படத்திலேயே நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
விஜய்சேதுபதியின் மூன்று மனைவிகளில் ஒருவராக ஒரு சில காட்சிகளிலேயே நடித்தாலும், துப்பாக்கி சுடும் காட்சியில் நடித்து கலக்கி இருந்தார். இந்நிலையில், சீக்கிரமாக அவர் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ள படத்தின் டப்பிங் பற்றிய அப்டேட்ஸ் போட்டோவுடன் வெளியாகி இருக்கிறது.
கதை பிடிக்காமல் மாதவன் இந்தக் கதையை ரிஜெக்ட் செய்தாரா.. சூர்யாவின் மாஸ் என்டர்டெயினர்!

சிக்ஸர் அடிக்கும் ஷிவானி
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் களமிறங்கி சிக்ஸர் அடித்து வருகிறார் ஷிவானி நாராயணன். இன்ஸ்டாகிராமில் 3 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டுள்ள ஷிவானி படு ஹாட்டான போட்டோக்களையும், க்யூட்டான போட்டோக்களையும் போட்டு ரசிகர்களை வசீகரித்து வருகிறார். சீரியலில் இருந்து பல நடிகைகள் சினிமாவில் என்ட்ரி கொடுத்து வரும் நிலையில், ஷிவானி தற்போது பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

விஜய்சேதுபதிக்கு மனைவி
கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் சந்தனம் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதிக்கு 3 மனைவிகள் உள்ளதாக திரைக்கதையை உருவாக்கிய லோகேஷ் கனகராஜ், ஷிவானி நாராயணன், விஜே மகேஷ்வரி மற்றும் மைனா நந்தினி ஆகிய மூவரையும் அவருக்கு ஜோடியாக போட்டு விட்டார். ஒரு சில காட்சிகள் மட்டுமே என்றாலும், ஷிவானிக்கு மட்டும் சற்றே ஸ்பெஷலாக வலது பக்கத்தில் உட்கார இடமும், துப்பாக்கி சுட சொல்லிக் கொடுக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.

வடிவேலுவுடன் ஜோடியாக
விக்ரம் படத்தைத் தொடர்ந்து வடிவேலு ஹீரோவாக நடித்து வரும் நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் ஷிவானி நாராயணன் நடித்து வருகிறார். இந்த படத்தில் வடிவேலுவுக்கு ஜோடியே அவர் தான் என்கின்றனர். மைசூர் அரண்மனையில் இரண்டாவது ஷெட்யூல் முடித்த பின்னர் படக்குழு வெளியிட்ட புகைப்படத்திலும் வடிவேலுவுக்கு அருகே ஷிவானி அமர்ந்திருந்த புகைப்படம் வெளியானது.

8 தோட்டாக்கள் ஹீரோவுடன்
நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் மட்டுமின்றி 8 தோட்டாக்கள் ஹீரோ வெற்றி நடிப்பில் உருவாகி வரும் பம்பர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார் ஷிவானி நாராயணன். படத்தின் சூட்டிங் முழுவதும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடைந்து விட்டதாம். இந்நிலையில், சமீபத்தில் அந்த படத்திற்கான டப்பிங் பணிகளில் ஷிவானி ஈடுபட்டுள்ளார்.

டப்பிங் முடித்த ஷிவானி
விக்ரம், வீட்ல விசேஷம் உள்ளிட்ட படங்களில் வாம்மா மின்னல் என தலை காட்டிய ஷிவானி நாராயணன் பம்பர் படத்தில் முழுக்க முழுக்க ஹீரோயினாக அசத்த உள்ளார். அந்த படத்தின் டப்பிங் பணிகளை அழகாக தனது சொந்தக் குரலிலேயே முடித்துக் கொடுத்திருக்கிறார் ஷிவானி நாராயணன். அதன் புகைப்படம் தற்போது சமூக வலைதளத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.