For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அடேங்கப்பா...விக்ரம் படத்தில் பிக்பாஸ் ஷிவானியா...அதுவும் இவருக்கு ஜோடியாவா?

  |

  சென்னை : கமல் நடிக்கும் விக்ரம் படத்தை டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பிற மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் நடிப்பதால் இந்திய அளவில் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

  அது மட்டுமில்லாமல் நான்கு வருடங்களுக்கு பிறகு கமல் நடிக்கும் படம் என்பதால் இந்த படம் மேலும் முக்கியம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதில் கமலுக்கு 5 வில்லன்கள் என்று வேறு சொல்லி படத்தின் மீதான சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தி உள்ளனர். விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் முக்கிய வில்லன் ரோல்களில் நடிக்கிறார்கள் என்று வேறு கூறி விட்டனர்.

  ஆன்லைனில் லீக்கான போதும்.. முதல் நாளில் பெத்த அமொவுண்டை வசூலித்த பெல் பாட்டம்.. குஷியில் பாலிவுட்! ஆன்லைனில் லீக்கான போதும்.. முதல் நாளில் பெத்த அமொவுண்டை வசூலித்த பெல் பாட்டம்.. குஷியில் பாலிவுட்!

  இவர்கள் மட்டுமல்ல இந்த படத்தில் மேலும் பல பிரபலங்கள் இணைந்துள்ளதாக அடுத்தடுத்து அப்டேட் வெளியிட்டு வருகின்றன. இந்த படத்தில் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராமும் நடிக்கிறார். அதுவும் கமலுக்கு மகனாக நடிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

  ஷிவானியும் வந்துட்டார்

  ஷிவானியும் வந்துட்டார்

  லேட்டஸ்ட் ஹாட் தகவலாக இந்த படத்தில் பிக்பாஸ் ஷிவானி நாராயணனும் இணைந்துள்ளாராம். இதுவரை சின்னத்திரை மற்றும் சோஷியல் மீடியாக்களில் பிரபலமாக இருந்த ஷிவானி, விக்ரம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைக்கிறார். முதல் படமே கமல் படம் என்பதால் அவருக்கு கூடுதல் பெருமையாக உள்ளது.

  இவருக்கு தான் ஜோடியா

  இவருக்கு தான் ஜோடியா

  இந்த படத்தில் காளிதாஸ் ஜெயராமுக்கு ஜோடியாக நடிக்க தான் ஷிவானி ஒப்பந்தமாகி உள்ளாராம். பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக பங்கேற்ற ஷிவானியின் செயல்பாடுகள் கமலை மிகவும் கவர்ந்து விட்டதாம். இதனால் இந்த படத்தில் காளிதாஸுக்கு ஜோடியாக ஷிவானியை நடிக்க வைக்க கமல் தான் சிபாரிசு செய்தாராம்.

  காரைக்குடியில் ஷுட்டிங்

  காரைக்குடியில் ஷுட்டிங்

  விக்ரம் படத்தின் ஷுட்டிங் இரண்டு நாட்களுக்கு முன்பு தான் காரைக்குடியில் துவங்கி நடந்து வருகிறது. முதல்கட்ட ஷுட்டிங்கில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் ஆகியோர் பங்கேற்று வரும் நிலையில், மிக விரைவில் ஷிவானியும் படக்குழுவுடன் இணைய போகிறாராம்.

  பிக்பாஸில் பிரபலமான ஷிவானி

  பிக்பாஸில் பிரபலமான ஷிவானி

  விஜய் டிவி.,யில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலம் நடிகையாகி, பிரபலமான ஷிவானி, தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம் உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்தார். தொடர்ந்து கடந்த ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 4 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதில் பாலாஜி உடனான இவரது காதல் காட்சிகள், அதனால் ஆரி- பாலாஜி இடையேயான மோதல் நிகழ்ச்சியின் டிஆர்பி.,யை பல மடங்கு உயர்த்தியது.

  சிங்கப் பெண்ணே

  சிங்கப் பெண்ணே

  போட்டி முடிவதற்கு சில வாரங்களுக்கு முன் நடந்த சிங்கப் பெண்ணே டாஸ்க்கில் ஷிவானியின் மனோபலம் அனைவரையும் கவர்ந்தது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, சோஷியல் மீடியாக்களில் கவர்ச்சி ஃபோட்டோஷுட், நடன வீடியோக்கள், மாலத்தீவு சென்ற போது வெளியிட்ட பிகினி ஃபோட்டோக்கள் ஆகியன ஷிவானியின் ரசிகர்களின் எண்ணிக்கையை தாறுமாறாக உயர்த்தியது. இப்போது சினிமாவில், அதுவும் கமல் உள்ளிட்ட டாப் ஹீரோக்கள் நடிக்கும் படத்தில் அறிமுகமாகி வேற லெவலுக்கு போய் விட்டார் ஷிவானி.

  இவங்களும் இருக்காங்க

  இவங்களும் இருக்காங்க

  விக்ரம் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்ய, அன்பறிவு சகோதரர்கள் ஸ்டன்ட் அமைத்து வருகிறார்கள். பிலோமின் ராஜ் எடிட்டிங்கை கவனித்து வருகிறார்.

  English summary
  biggboss fame shivani narayanan to join in kamal's vikram movie. she will pair for kalidas jayaram. few days back vikram shooting begins in karaikudi. next few days shivani also joined in this first schedule of shoot.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X