»   »  தமிழில் அறிமுகமாகும் டாக்டர் பொண்ணு... விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்!

தமிழில் அறிமுகமாகும் டாக்டர் பொண்ணு... விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள்

சென்னை : டாக்டர் ராஜசேகர் மகள் ஷிவானி தெலுங்கில் அறிமுகமாக இருக்கிறார். அதைத் தொடர்ந்து தமிழுலும் நடிக்க இருக்கிறார்.

ஷிவானி, விஷ்ணு விஷால் தயாரித்து நடிக்கும் படத்தில் தான் தமிழில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு பின்னணி பாடகர் க்ரிஷ் இசையமைக்க இருக்கிறார். இப்படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது.

டாக்டர் ராஜசேகர்

டாக்டர் ராஜசேகர்

பாரதிராஜா இயக்கத்தில் 1984-ம் ஆண்டு வெளிவந்த 'புதுமைப் பெண்' படத்தில் வில்லனாக அறிமுகமானவர் டாக்டர் ராஜசேகர். அதன் பின் தெலுங்குத் திரையுலகத்தில் அறிமுகமாகி முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்தவர்.

ஜீவிதா

ஜீவிதா

ராஜசேகர் தெலுங்கில் நடித்த 'அங்குசம்' படம் தமிழில் 'இதுதான்டா போலீஸ்' என டப்பிங் ஆகி பெரும் வெற்றியைப் பெற்றது. அவரது காதல் மனைவி நடிகை ஜீவிதா. இவரும் 'உறவைக் காத்த கிளி' தமிழ்ப் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர்.

ராஜசேகர் மகள்

ராஜசேகர் மகள்

ராஜசேகர் - ஜீவிதாவின் மகள் ஷிவானி டாக்டருக்குப் படித்து வருகிறார். கடந்த சில வருடங்களாகவே திரையுலகத்தில் நடிகையாக அறிமுகமாவார் என்று எதிர்பார்க்கப்பட்டார். அதற்காக போட்டோஷூட் ஒன்றையும் நடத்தி வாய்ப்பு பெற முயற்சிக்கப்பட்டது.

தமிழில் ஷிவானி

தமிழில் ஷிவானி

இப்போதுதான் தெலுங்கில் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார் ஷிவானி. அதைத் தொடர்ந்து தமிழிலும் அறிமுகமாக உள்ளார். விஷ்ணு விஷால் நாயகனாக நடிக்க அறிமுக இயக்குனர் வெங்கடேஷ் இயக்க உள்ள புதிய படத்தில் ஷிவானி கதாநாயகியாக அறிமுகமாகிறார்.

இசையமைப்பாளர் க்ரிஷ்

இசையமைப்பாளர் க்ரிஷ்

இப்படத்தின் மூலம் பின்னணிப் பாடகர் க்ரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். விஷ்ணு விஷால் ஜோடியாக ராஜசேகர் மகள் ஷிவானி நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் ஆரம்பமாக உள்ளது.

விஷ்ணு விஷால்

விஷ்ணு விஷால்

ஷிவானியை தன் படத்தில் ஜோடியாக அறிமுகப்படுத்த உள்ள நடிகரும், தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால் "விஷ்ணு விஷாஸ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் நான்காவது படத்தில் நாயகியாக அறிமுகமாக உள்ள ஷிவானி ராஜசேகரை வரவேற்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.

English summary
Dr.Rajasekar - Jeevitha's daughter Shivani is studying for the doctor. Shivani has been signed to act in a new tamil film. Shivani will paired up with Vishnu Vishal in debut director Venkatesh's film. The shooting of the film will begin in April.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil