»   »  ஷோபனாவின் நோபுள் டான்ஸ்!

ஷோபனாவின் நோபுள் டான்ஸ்!

Subscribe to Oneindia Tamil

எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயாளுக்கு நிதி திரட்டுவதற்காக நடிகையும், சிறந்த பரத நாட்டியக் கலைஞருமான ஷேபானா, நாட்டிய நாடகம் ஒன்றை அரங்கேற்றப் போகிறார்.

சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் ஷோபனா. நடிகையாக மட்டுமல்லாமல், சிறந்த பரத நாட்டியக் கலைஞரும் ஆவார் ஷோபனா.

தற்போது நடிப்பைக் குறைத்துக் கொண்டு நாட்டியம், நாட்டிய நாடகங்களில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் ஷோபனா. இந்த நிலையில் ஒரு வித்தியாசமான நாட்டிய நாடகத்தை, ஆங்கிலத்தில், வருகிற 30ம் தேதி சென்னை மியூசிக் அகாடமியில் அரங்கேற்றுகிறார் ஷோபனா.

செக்ஸ் உழைப்பாளர்களின் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நலனுக்காக நிதி திரட்ட இந்த நாட்டிய நாடகம் நடத்தப்படுகிறது. எஸ்.எப்.டி.ஆர்.டி என்ற அமைப்பு இந்த நாட்டிய, நாடகத்தை ஏற்பட்டுள்ளது.

90 நிமிடங்கள் நடக்கவுள்ள ஷோபனாவின் இந்த நாடகத்திற்கு இந்தி நடிகர் நசிருதீன் ஷா, நடிகை சுஹாசினி ஆகியோர் குரல் கொடுக்கவுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி குறித்து ஷோபனா செய்தியாளர்களிடம் கூறுகையில், மாய ராவணா என்று இந்த நிகழ்ச்சிக்குப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. எய்ட்ஸ் மற்றும் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்கள் மீது சமூகம் கொண்டுள்ள பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும். மூட நம்பிக்கைகள் அகல வேண்டும். இதையும் எனது நாடகத்தின் மூலம் சொல்லவுள்ளேன் என்றார் ஷோபனா.

ஷோபனா ரசிக்கப்பட வேண்டியவர் மட்டுமல்ல, பாராட்டப்பட வேண்டியவரும் கூட.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil