»   »  நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி வசனம் காமெடியா இருக்காம் இந்த நடிகைக்கு!

நான் ஒரு தடவை சொன்னா, 100 தடவை சொன்ன மாதிரி வசனம் காமெடியா இருக்காம் இந்த நடிகைக்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பாட்ஷா படத்தில் ரஜினிகாந்த் கூறும் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி வசனத்தை கேட்டால் காமெடியாக இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

இது என்ன மாயம் படம் மூலம் கேரளாவில் இருந்து கோலிவுட் வந்தவர் கீர்த்தி சுரேஷ். அவருடைய அம்மா மேனகா நெற்றிக்கண் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்தவர். கீர்த்தி டிவி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு அவர் அளித்த பதில் பலரையும் வியக்க வைத்துள்ளது.

காமெடி

காமெடி

தமிழ் சினிமாவில் எந்த வசனம் காமெடியாக உள்ளது என நினைக்கிறீர்கள் என்று அந்த நிகழ்ச்சியில் கீர்த்தியிடம் கேட்டனர். அந்த கேள்விக்கு மறைக்காமல் உண்மையை தெரிவிக்குமாறு கேட்டுள்ளனர்.

ரஜினி வசனம்

ரஜினி வசனம்

பாட்ஷா படத்தில் ரஜினி பேசும் நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி வசனம் காமெடியாக உள்ளதாகவும், அதை கேட்கும் போது எல்லாம் தன்னால் சிரிப்பை அடக்க முடியாது என்றும் கீர்த்தி தெரிவித்துள்ளார்.

அய்யய்யோ

அய்யய்யோ

ரஜினியின் வசனத்தை அதுவும் மிகவும் பிரபலமான வசனத்தை காமெடியாக இருக்கிறது என்று கூறிவிட்டோமே என்று உணர்ந்த கீர்த்தி சுதாரித்துக் கொண்டார். எனக்கு பிடித்த வசனங்களில் அதுவும் ஒன்று, அதை கேட்கும் போது எல்லாம் என் முகத்தில் புன்னகை ஏற்படும் என்று கூறி ஒருவகையாக சமாளித்தார்.

ரஜினி ரசிகர்கள்

ரஜினி ரசிகர்கள்

பலரையும் கவர்ந்த அந்த வசனத்தை பற்றி கீர்த்தி அவ்வாறு கூறியது ரஜினி ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. இப்ப தான் நடிக்க வந்திருக்கிறார், வந்த வேகத்தில் ரஜினியை கிண்டல் செய்வதா என்று ரசிகர்கள் குமுறியுள்ளனர்.

English summary
At a recently held interview the actress, who has just begun her career in Tamil cinema, has landed herself in trouble by calling one of Superstar Rajinikanth's famous punch dialogues amusing and funny. The actress in question is none other than Idhu Enna Maayam girl Keerthi Suresh.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil