»   »  ஓமைகாட்: சல்மான் கானை ஒதுக்கிவிட்டு ஷாருக்கானை தேர்வு செய்த கத்ரீனா கைஃப்

ஓமைகாட்: சல்மான் கானை ஒதுக்கிவிட்டு ஷாருக்கானை தேர்வு செய்த கத்ரீனா கைஃப்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் சல்மான் கான் அல்ல மாறாக ஷாருக்கானுடன் சேர்ந்து மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஆசைப்படுகிறார்.

லண்டனில் இருந்து மும்பை வந்து செட்டிலாகி பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார் கத்ரீனா கைஃப். அவர் நடிக்க வந்த புதிதில் சல்மான் கானின் காதலியானார். அவர் சல்மான் கானை வைத்து தான் பாலிவுட்டில் முன்னேறியதாக பேசப்படுகிறது.

இந்நிலையில் கத்ரீனாவும், சல்மானும் பிரிந்துவிட்டார்கள். காதல் முறிவுக்கு பிறகும் கத்ரீனா சல்மான் வீட்டு விசேஷங்களில் கலந்து கொண்டு வருகிறார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

சல்மான் கான், ஷாருக்கான் இந்த இருவரில் யாருடன் மீண்டும் சேர்ந்து நடிக்க விரும்புகிறீர்கள் என்று கத்ரீனாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவரோ சட்டென்று ஷாருக்கான் பெயரை தெரிவித்துவிட்டார்.

சல்மான் கான்

சல்மான் கான்

என்ன கத்ரீனா ஷாருக்கான் பெயரை தெரிவித்துவிட்டீர்கள் அப்பொழுது சல்மான் கான் என கேட்டதற்கு சிறிது யோசித்துவிட்டு அது நடக்கிறதா என்று பார்ப்போம். நடக்க வேண்டும் என இருந்தால் நடக்கும் என்றார்.

புதிய ஜோடி

புதிய ஜோடி

ஒருவர் பலருடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டும். புதிய ஜோடிகளை நடிக்க வைக்கவே இயக்குனர்கள் விரும்புகிறார்கள். அப்படி இருக்கையில் நான்கு அல்லது 5 ஆண்டுகள் கழித்து நான் ஏற்கனவே சேர்ந்து நடித்தவருடன் நடிக்குமாறு கூறினால் நடிப்பேன் என்று கத்ரீனா கூறியுள்ளார்.

வேண்டாம்

வேண்டாம்

அண்மை காலமாக சல்மான் கான் கத்ரீனாவிடம் இருந்து தள்ளியே உள்ளார். அவரை தனக்கு ஜோடியாக்க வேண்டாம் என்று இயக்குனர்களிடம் கூறி வருகிறார்.

பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜான்

பஜ்ரங்கி பாய்ஜானில் சல்மான் ஜோடியாக கத்ரீனாவை நடிக்க வைக்க நினைத்தார் இயக்குனர் கபீர் கான். ஆனால் சல்மானோ கத்ரீனா வேண்டாம் கரீனா கபூரை நடிக்க வையுங்கள் என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Katrina Kaif has worked with both Shahrukh Khan and Salman Khan but when she was asked recently with whom she wants to work again, she took the name of Shahrukh Khan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil