"பெண்களைச் சீண்டுபவர்களின் கையை வெட்டவேண்டும்" - கோபமாகப் பேசிய அனுஷ்கா!

By Vignesh Selvaraj

Recommended Video

பாகமதி ப்ரோமோஷன் விழாவில் அனுஷ்காவின் அதிர்க்ட்டி பேச்சு

சென்னை : அனுஷ்கா நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவிருக்கும் படம் 'பாகமதி'. இப்படம் ஒரு த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது.

இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக வந்திருந்த அனுஷ்கா பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள் பற்றி தனது கருத்தை கூறியுள்ளார்.

பெண்களை பாலியல் ரீதியாக சீண்டுபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்று நடிகை அனுஷ்கா கூறியுள்ளார்.

பாகமதி

பாகமதி

'பாகுபலி' படத்துக்குப் பிறகு அனுஷ்கா 'பாகமதி' என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. 'பாகமதி' படம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகும் த்ரில்லர் படமாகும்.

தமிழில் ஸ்டூடியோ கிரீன் வெளியீடு

தமிழில் ஸ்டூடியோ கிரீன் வெளியீடு

அனுஷ்காவுடன் ஜெயராம், உன்னி முகுந்தன் ஆஷா சரத் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக மதி ஆகியோர் பணிபுரிந்து இருக்கிறார்கள். இப்படத்தை இயக்குனர் அசோக் இயக்கியுள்ளார். தெலுங்கில் யூவி கிரியேஷன்ஸ் தயாரித்திருக்கிறது. தமிழில் ஸ்டூடியோ க்ரீன் வெளியிடுகிறது.

பாலியல் தொல்லை

பாலியல் தொல்லை

இந்நிலையில், 'பாகமதி' ப்ரொமோஷன் நிகழ்வில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கிறார் அனுஷ்கா. அதில், எல்லா துறைகளிலும் பெண்களுக்கு பாலியல் தொல்லை உள்ளது எனக் கூறியிருக்கிறார்.

பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்

பெற்றோர்கள் சொல்லிக்கொடுக்க வேண்டும்

"இந்தியாவில் 60% பெண்கள், அவர்களின் குடும்ப உறுப்பினர்களாலேயே பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக ஒரு ஆய்வு சொல்கிறது. ஆனால் இதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை. பெற்றோர்கள், தங்களின் குழந்தைகளுக்கு இதுபோன்ற செயல்கள் நடந்தால் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்களுக்குள் தைரியம் பிறக்கும்.

கையை வெட்ட வேண்டும்

கையை வெட்ட வேண்டும்

'பாகுபலி 2' படத்தில் என்னைத் தொடுபவரின் கையை வாளால் வெட்டுவேன். அதுபோன்று நிஜவாழ்க்கையில் பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்கும் வக்கிரபுத்திக்காரர்களின் கையை வெட்ட வேண்டும்" என அனுஷ்கா பேசியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X