»   »  ஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா?: வாரிசு நடிகை விளக்கம்

ஹீரோ வீட்டில் இருந்து தந்தையால் இழுத்து வரப்பட்டேனா?: வாரிசு நடிகை விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தரின் வீட்டில் இருந்து சக்தி கபூர் தன்னை இழுத்து வந்ததாக வெளியான தகவலில் உண்மை இல்லை என நடிகை ஷ்ரத்தா கபூர் தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது மனைவியை பிரிய நடிகை ஷ்ரத்தா கபூருடனான தொடர்பே காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ஃபர்ஹானுடன் லிவ் இன் முறைப்படி வாழச் சென்ற ஷ்ரத்தாவை அவரது தந்தையும், நடிகருமான சக்தி கபூர் வீடு புகுந்து இழுத்து வந்ததாக செய்திகள் வெளியாகின.

இது குறித்து ஷ்ரத்தா கூறியிருப்பதாவது,

செய்தி

செய்தி

ஃபர்ஹானின் வீட்டில் இருந்து என் தந்தை என்னை இழுத்து வந்ததாக வெளியான செய்தி குறித்து எனக்கு தெரிய வந்தது. அந்த செய்தி உண்மை இல்லை என்பதால் அதை நான் கண்டுகொள்ளவில்லை.

ஆதித்யா

ஆதித்யா

முன்னதாக நானும், ஆதித்யா ராய் கபூரும் காதலிப்பதாக கூறினார்கள். தற்போது ஃபர்ஹான். நாங்களும் மனிதர்கள் தான் என்பதை மக்கள் மறந்துவிடுகிறார்கள்.

குடும்பம்

குடும்பம்

என்னை பற்றி எது பேசினாலும் பொறுத்துக் கொள்வேன். ஆனால் என் குடும்பத்தாரை இதில் தொடர்புபடுத்தி பேசினால் என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது.

பெற்றோர்

பெற்றோர்

என் பெற்றோரின் வீட்டில் வசிக்கிறேன். அந்த வீட்டில் தான் நான் பிறந்து, வளர்ந்தேன். எனக்கு என்று தனியாக வீடு இருந்தாலும் நான் அங்கு வசிப்பது இல்லை. நான் திருமணம் ஆனாலும் மாப்பிள்ளையை பெற்றோர் வீட்டிற்கே அழைத்து வருவேன் என்று குடும்பத்தார் ஜோக் அடிப்பார்கள்.

English summary
Bollywood actress Shraddha Kapoor has finally reacted to the rumour that her father dragged her from actor Farhan Akhtar's house.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil