»   »  ஃபாலோ செய்து தொல்லை கொடுத்தவரை 'மாத்தி யோசித்து' தண்டித்த நடிகை

ஃபாலோ செய்து தொல்லை கொடுத்தவரை 'மாத்தி யோசித்து' தண்டித்த நடிகை

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: ஒரே நாளில் தன்னை 17 முறை பின்தொடர்ந்து வந்த நபரை பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் கட்டிப்பிடித்துள்ளார்.

நடிகைகளை ரசிகர்கள் மற்றும் ஒரு சில நபர்கள் பின்தொடர்வது புதிது அல்ல. இதை பார்த்து நடிகைகள் கடுப்பாவார்கள். ஆனால் பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் சற்றே வித்தியாசமானவராக உள்ளார்.

Shraddha Kapoor tames her stalker

ஷ்ரத்தா கபூரை வாலிபர் ஒருவர் ஒரே நாளில் 17 முறை பின்தொடர்ந்துள்ளார். இதை பார்த்த ஷ்ரத்தா அந்த நபருக்கு வித்தியாசமான முறையில் பாடம் கற்பிக்க நினைத்தார்.

அவர் கலந்து கொண்ட நிகழ்ச்சி ஒன்றுக்கும் அந்த நபர் வந்து நின்றுள்ளார். இதை பார்த்த ஷ்ரத்தா அந்த நபரை மேடைக்கு அழைத்து, இவர் தான் என்னை ஒரே நாளில் 17 முறை பின்தொடர்ந்த நபர் என்று ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

மேலும் அந்த நபரை கட்டிப்பிடித்தார். இதை சற்றும் எதிர்பாராத அந்த நபர் வெட்கி தலைகுனிந்தார்.

English summary
Bollywood actress Sharaddha Kapoor hugged a man who stalked her 17 times in a day.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil