»   »  ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா

ரஜினி குழந்தை மாதிரி - ஷ்ரியா

Posted By:
Subscribe to Oneindia Tamil

ரஜினி ஒரு குழந்தை மாதிரி என்று கூறியுள்ளார் அவருக்கு ஜோடியாக களேபரமான காஸ்ட்யூம்களில் சிவாஜியில் கலக்கியுள்ள ஷ்ரியா.

ராஜாதி ராஜா, முரட்டுக்காளை, மாவீரன் என ரஜினியை அவரது ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரோ, பாக்ஸ் ஆபீஸ் பாட்ஷா என கூறுகின்றனர். அரசியல்வாதிகளுக்கோ ரஜினி குறித்த பயம் இன்னும் முழுசாகப் போகவில்லை. ஆனால் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ள ஷ்ரியாவின் பார்வையிலோ ரஜினி ஒரு குழந்தை மாதிரி தெரிகிறாராம்.

சிவாஜியில் ரஜினியுடன் நடித்த அனுபவம் குறித்து யாராவது ஷ்ரியாவிடம் கேட்டால் கதை கதையாக சொல்லி மாய்ந்து போகிறார். குறிப்பாக ரஜினி குறித்து பேச ஆரம்பித்தால் ஓயவே மாட்டேன் என்கிறார்.

ஒரு அழகான குழந்தையைப் பார்த்தால் யாருக்குமே பிடிக்கும். அந்தக் குழந்தையுடன் விளையாடி, மகிழ தோணும். ரசிக்கப் பிடிக்கும், அப்படித்தான் ரஜினி சாரும். அவரும் ஒரு குழந்தை மாதிரிதான். அனைவரும் விரும்பும் அன்புக் குழந்தைதான் ரஜினி சார்.

சிவாஜி படத்தில் நடித்த அனுபவம் ஒரு கனவு மாதிரி இருக்கிறது. ஒரு நடிகைக்கு வாழ்க்கையில் ஒரு முறைதான் இப்படிப்பட்ட அனுபவம், வாய்ப்பு கிடைக்கும். அந்த அதிர்ஷ்டசாலியாக நானும் அமைந்திருக்கிறேன்.

உண்மையில் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர்ந்து நடிக்க நான் ரொம்பவே தயங்கினேன். காரணம், எனக்கும், அவருக்கும் இடையே கிட்டத்தட்ட 40 வருட வயது வித்தியாசம் உள்ளது. ஆனால் எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டு நடிக்க ஒப்புக் கொண்டேன்.

படப்பிடிப்பின்போது பல காட்சிகளில் எப்படி நடிக்க வேண்டும் என்று ரஜினி சார் அறிவுரை கூறினார், எனது பயத்தைப் போக்கி ஜாலியாக நடிக்க வைத்தார்.

வெறும் நடிகராக மட்டும் ரஜினியை நான் பார்க்கவில்லை. ஒரு கடவுளாக பார்க்கிறேன். அவரது ஈடுபாடு, நேரம் தவறாமை, இரக்கம், கவனம் எல்லாமே ஒவ்வொரு நடிகருக்கும் ஒரு பாடம் போல இருக்கிறது. யாருடனும் அவரை ஒப்பிடவே முடியாது ...

ஷ்ரியாவின் பாராட்டு, புகழுரை தொடர்ந்து கொண்டிருந்தது. நமக்குத்தான் வாங்கிக் கொள்ள காதில் இடம் இல்லை, ஓடி வந்து விட்டோம்.

இப்படித்தான் முன்பு மீனா, ரஜினியை புகழ்ந்து தள்ளிப் பேசிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் சங்கோஜமாகிப் போன ரஜினி, மீனாவை நேரில் கூப்பிட்டு இனிமேல் இப்படியெல்லாம் பேசப்படாது, ஓ.கே. என்று அட்வைஸ் செய்தாராம்.

ஷ்ரியாவை விட்டால், ரஜினியை இடுப்பில் தூக்கி வைத்து அம்புலி மாமாவைக் காட்டி பப்பு ஊட்டி விடுவார் போலிருக்கே!!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil