»   »  சதா ஆவாரா ஷ்ரியா?

சதா ஆவாரா ஷ்ரியா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

அந்நியன் வரட்டும், அப்புறம் பார்த்துக்குறேன் என்று வீம்பாக இருந்து வீணாய்ப் போன சதா பாணியில், சிவாஜி நாயகி ஷ்ரியாவும் கிளம்பியிருப்பதால் அவரது எதிர்காலம் குறித்த கவலை மேகங்கள் கோலிவுட் வானில் கும்மியடிக்க ஆரம்பித்திருக்கின்றன.

அந்நியனுக்கு முன்பு இருந்த சதா வேறு, அதன் பின்னர் இருக்கும் சதாவின் நிலையே வேறு. ஜெயம் படத்தின் வெற்றியால் சதா பெரும் எதிர்பார்ப்புக்குரிய நாயகியாக மாறினார்.

ஆனாலும் அவர் காட்டிய பந்தாக்களும், படுதாக்களும் அதிகமாக இருந்ததால், அவரை புக் பண்ணுவதிலும் தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டன.

இந்த நிலையில்தான் அந்நியன் படத்தில் சதாவை புக் செய்தார் ஷங்கர். எடுத்த எடுப்பிலேயே விக்ரம், ஷங்கருடன் இணைந்ததால், சதாவைப் பிடிக்க முடியவில்லை.

சதாவின் மார்க்கெட் ரேஞ்சு மாறிப் போனதைப் பார்த்து பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் சதாவை நாடி ஓடினர். ஆனால் அவரோ, ஸாரி, அந்நியன் வரும் வரை எந்தப் படத்தையும் ஒத்துக் கொள்ளப் போவதில்லை.

அந்நியனுக்குப் பிறகு எனது ரேஞ்சே மாறப் போகிறது. அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று கூறி திருப்பி அனுப்பி வந்தார்.

இதனால் நிறைய பட வாய்ப்புகளை இழந்தார் சதா. அந்நியனும் வந்தது. ஆனால் சதாவைத்தான் கவிழ்த்துப் போட்டு விட்டுப் போய் விட்டது. அந்நியனுக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்காததால், சதாவை சீண்டுவார் யாரும் இல்லாமல் போய் விட்டது.

உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா என்ற கதையாக வந்த வாய்ப்புகளையும் விட்டு விட்டு ஆண்டியாக நின்றார் சதா. இப்போது சதா பாணியை ஷ்ரியாவும் பின்பற்ற ஆரம்பித்திருப்பதால் கோலிவுட் அவரைக் கவலையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளதாம்.

சிவாஜி படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது ஷ்ரியாவைத் தேடி நிறையப் படங்கள் வந்தன. ஆனால் அவற்றையெல்லாம் வேண்டாம், வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளிக் கொண்டிருந்தார் ஷ்ரியா.

அப்படி அவர் நிராகரித்த படம்தான் வாரணம் ஆயிரம். சூர்யாவுடன் ஜோடி போடும் வாய்ப்பை வேண்டாம் என்று நிராகரித்து விட்டார். இப்போது அதற்காக வருந்துகிறாராம்.

ஷ்ரியா வேண்டாம் என்று சொன்ன அந்த ரோலில் இப்போது ஜெனீலியா (முன்னாள் ஹரிணி) நடிக்கவுள்ளார்.

இதுபோலவே கமல்ஹாசனுடன் தசாவதாரம் படத்தில் இணைந்து நடிக்கும் வாய்ப்பையும் நிராகரித்தார் ஷ்ரியா. அந்த வாய்ப்பை ஆசின் பறித்துக் கொண்டார்.

இப்படி நல்ல நல்ல படங்களை இழந்த ஷ்ரியா, இப்போது தேடித் தேடி புதிய படங்களைப் புக் பண்ண ஆரம்பித்துள்ளாராம். இருந்தாலும் சிவாஜி படத்தில் ஷ்ரியாவின் நடிப்பைப் பார்த்து பயந்து போன பல தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும், ஷ்ரியா கண்டிப்பா வேணுமா என்ற யோசனைக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது.

ஷ்ரியா சத்தாய்ப்பாரா அல்லது சதா ஆவாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil