»   »  ஷ்ரியாவை கைவிட்ட கமல்!!

ஷ்ரியாவை கைவிட்ட கமல்!!

Posted By:
Subscribe to Oneindia Tamil

பி.வாசுவின் இயக்கத்தில் கலைஞானி கமல்ஹாசன் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை இழந்துள்ளார் ஷ்ரியா. எல்லாம் அவர் கேட்ட குண்டக்க மண்டக்க சம்பளம்தான் காரணமாம்.

சிவாஜிக்குப் பிறகு ஷ்ரியாவுக்கு பெரிய டிமாண்டு ஏற்பட்டு விட்டது. பலரும் முண்டியடித்து தங்களது படங்களில் ஷ்ரியாவை நடிக்க வைக்க முயன்று வருகின்றனர். ஆனால் ஷ்ரியா சம்பளம் குறித்து வாய் திறந்ததும் பேச்சடைத்து, மூச்சடைத்து ஓடிப் போய் விடுகிறார்களாம்.

சிவாஜி மாபெரும் ஹிட் படமாகி விட்டதால், ஷ்ரியா தனது சம்பளத்தை 70 லட்சமாக்கி விட்டாராம். புக் பண்ண வருகிறவர்களிடம் ஏழு விரல்களை விரித்துக் காட்டி, என்ன ஓகே.வா என்கிறாராம்.

இவர் இப்படிக் கேட்பதால் கடுப்பாகியுள்ளனராம் தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும். அவர்களில் கமல்ஹாசனும் ஒருவர். பி.வாசுவுடன் நீண்ட காலத்திற்குப் பிறகு இணைகிறார் கமல். இருவரும் இணைந்து உருவாக்கப் போகும் படம் தசாவதாரம் முடிந்த பிறகு வளரவுள்ளது.

லண்டன் கருணாஸ் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தில் கமலுக்கு ஜோடியாக ஷ்ரியாவை நடிக்க வைக்கலாம் என வாசு தீர்மானித்தார். இதற்கு கமலும் ஓகே. சொன்னார். ஆரம்பத்தில் தசாவதாரம் படத்திலேயே நடிக்க அணுகினார் கமல். ஆனால், சிவாஜியில் நடித்துக் கொண்டிருந்ததால், கமல் பட வாய்ப்பைத் தவற விட்டார் ஷ்ரியா.

எனவே இந்த முறை வந்த வாய்ப்பை விடாமல் பிடித்துக் கொள்ள ஆர்வமாக இருந்தார். ஆனால் அவர் கூறிய சம்பளத்தைக் கேட்டதும், கமல் உள்ளிட்ட அனைவரும் அதிர்ச்சியாகி விட்டார்களாம்.

ஷ்ரியா வேண்டாம், வேறு ஆளைப் பார்க்கலாம் என்று கமல் கூறி வி்டடாராம். இதனால் இப்போது கமல் படத்தில் ஷ்ரியா இல்லையாம். அனேகமாக திரிஷா கமலுடன் ஜோடி போடக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாக திரையுலகில் கிசுகிசுக்கப்படுகிறது.

இந்த நிலையில் கமல்ஹாசனை வைத்து ஒரு படத்தைத் தயாரிக்க நடிகர் பிரபு விரும்புகிறாராம். இதற்காக கமலையும் அணுகியுள்ளாராம்.

அப்ப இந்திரமுகி ரெடி!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil