»   »  ஷ்ரேயா - விக்ரம் கிருஷ்ணா நிச்சயதார்த்தம்

ஷ்ரேயா - விக்ரம் கிருஷ்ணா நிச்சயதார்த்தம்

Subscribe to Oneindia Tamil


நடிகை ஷ்ரேயா ரெட்டிக்கும், நடிகர் விஷாலின் அண்ணனும், தயாரிப்பாளருமான விக்ரம் கிருஷ்ணாவுக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது. அடுத்த ஆண்டு மார்ச் 9ம் தேதி இவர்களின் திருமணம் நடைபெறவுள்ளது.


விக்ரம் கிருஷ்ணா தயாரித்த திமிரு படத்தில் நடித்தபோதுதான் ஷ்ரேயாவுக்கும் அவருக்கும் காதல் மலர்ந்தது. இந்தக் காதலுக்கு இரு வீட்டாரும் ஆதரவு தெரிவித்தனர். இதையடுத்து தற்போது இவர்களின் கல்யாண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

போயஸ் தோட்டத்தில் உள்ள ஷ்ரேயா ரெட்டியின் வீட்டில் நேற்று நிச்சயதார்த்தம் கோலாகலமாக நடந்தது. மாலையில் நடந்த இந்த திருமண நிச்சயதார்த்த விழாவில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள், கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமணத்தை அடுத்த ஆண்டு மார்ச் 9ம் தேதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாம்.

தெலுங்குத் தயாரிப்பாளர் ஜி.கே.ரெட்டியின் மூத்த மகன்தான் விக்ரம் கிருஷ்ணா. சண்டைக்கோழி, திமிரு மற்றும் தற்போது உருவாகி வரும் சத்யம் ஆகிய படங்களை தயாரித்துள்ளார். மூன்று படங்களிலுமே விஷால்தான் நாயகன்.

திமிரு படத்தில் ஈஸ்வரி என்ற மிரட்டல் கேரக்டரில் கலக்கலாக நடித்திருந்தார் ஷ்ரேயா. இதையடுத்து வெயில் மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய படங்களில் நடித்துள்ளார் அவர்.

நடித்தது மூன்று படங்களில்தான் என்றாலும் மூன்றிலும் முத்திரை பதித்திருந்தார் ஷ்ரேயா. ஆனால் விக்ரம் கிருஷ்ணா நடிகராக தோல்வி அடைந்தவர். இருப்பினும் அவர் தயாரிப்பில் உருவான திமிரு மற்றும் சண்டக்கோழி ஆகிய இரு படங்களும் சூப்பர் ஹிட் ஆனவை. சத்யம் படமும் சூப்பர் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் ரெட்டி குடும்பமே உள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil