»   »  ஹாலிவுட்டில் ஷ்ரியா!

ஹாலிவுட்டில் ஷ்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Click here for more images
சிவாஜி மூலம் கோலிவுட்டில் கொடி நாட்டிய ஷ்ரியா, அடுத்து ஹாலிவுட்டுக்குப் பறக்கிறார்.
மழை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஷ்ரியாவின் காட்டில் அதுவரை லேசான மழைதான் பெய்து கொண்டிருந்தது. ஆனால் சிவாஜிக்குப் பிறகு பட வாய்ப்பு அடை மழையாக மாறிப் போனது.

தமிழிலும், தெலுங்கிலும் படு பிசியாக நடித்து வரும் ஷ்ரியா, இந்தியிலும் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார். எந்த வாய்ப்பு வந்தாலும் விடாமல் கால்ஷீட்டுகளை அள்ளி வழங்கி அசத்திக் கொண்டிருக்கும் ஷ்ரியா (இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு - ரூ. 50 லட்சம் சம்பளமாக பெற்றுக் கொண்டு- ஆடிக் கொண்டிருக்கிறார்) அடுத்து ஹாலிவுட்டையும் ஒரு கை பார்க்க தயாராகி விட்டார்.

ஹாலிவுட்டில் பிரபல படத் தயாரிப்பாளர்களாக விளங்கும் முன்னாள் டென்னிஸ் நாயகர்கள் விஜய் அமிர்தராஜ், ஆனந்த் அமிர்தராஜ் சகோதரர்கள் தயாரிக்கும் புதிய படத்தில் ஷ்ரியா நடிக்கவுள்ளார்.

கடந்த வாரம் இதுதொடர்பான ஒப்பந்தத்தில், பிரபல ஹாலிவுட் நிறுவனமான எம்.ஜி.எம். மற்றும் அசோக் அமிர்தராஜின் ஹைட் பார்க் பிலிம் நிறுவனமும், ஷ்ரியாவை புக் செய்தனர்.

படத்திற்கு 'தி அதர் எண்ட் ஆப் தி லைன்' என்று பெயரிட்டுள்ளனர். நவம்பர் முதல் வாரத்தில் ஷூட்டிங் தொடங்குகிறதாம்.

இது ஒரு காதல் கதை. மும்பையில் உள்ள இந்திய கால் சென்டரில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணின் கதை. சான்பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த ஒருவருடன் அந்தப் பெண்ணுக்கு 'கால்' மூலம் காதல் மலர்கிறது. மனம் கவர்ந்த அந்த நபரைத் தேடி சான்பிரான்சிஸ்கோ பறக்கிறார். அதன் பிறகு நடப்பதைத்தான் படமாக்கவுள்ளனர்.

இப்படத்தில் ஹீரோவாக நடிக்கவிருப்பது ஜெஸ்ஸி மெக்கால்ப். டெஸ்பரேட் ஹவுஸ்வைப்ஸ் என்ற டிவி தொடரில் நடித்தவர் ஜெஸ்ஸி. இவர் நடித்துள்ள லோடட் என்ற திரைப்படம் நவம்பர் 1ம் தேதி உலகம் பூராவும் ரிலீஸாகவுள்ளது.

ஜெஸ்ஸியின் ஜோடியாக ஷ்ரியா நடிக்கிறார். தனது ஹாலிவுட் என்ட்ரியை ஷ்ரியா தனது வாயால் உறுதி செய்துள்ளார். இன்னொரு ஹீரோயினாக தாரா சர்மா நடிக்கிறார்.

தற்போது விக்ரமுடன் கந்தசாமி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன் உள்பட 3 படங்களில் நடித்து வருகிறார் ஷ்ரியா.

பாலிவுட், கோலிவுட், டோலிவுட்டைக் கலக்கிய ஷ்ரியா ஹாலிவுட்டையும் ஜாலி செய்வாரா என்பதை வெயிட் அண்ட் சீ!

Read more about: shriya

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil