»   »  நயன் படத்தில் ஷ்ரியா!

நயன் படத்தில் ஷ்ரியா!

Posted By:
Subscribe to Oneindia Tamil


நயனதாரா நாயகியாக நடிக்கும் படத்தில் ஷ்ரியா சிலிர்க்க வைக்கும் குத்துப் பாட்டுக்கு ஆடியுள்ளாராம். ஆனால் தமிழில் அல்ல, தெலுங்கில்.

சிவாஜிக்கு முந்தைய ஷ்ரியாவை விட, சிவாஜிக்குப் பிந்தைய ஷ்ரியாதான் படு சிலிர்ப்பாக, பூரிப்பாக உள்ளார். சிவாஜியில் நடித்ததால் ஷ்ரியா தென்னிந்திய அளவில் டிமாண்டுக்குரிய நாயகியாகியுள்ளார்.

தற்போது அவர் விஜய், அஜீத், விக்ரம், ஜெயம் ரவி அத்தனை இளம் நாயகர்களுடனும் ஜோடி போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் ஒரு படத்தில் குத்துப் பாட்டுக்கு ஆடும் வாய்ப்பு ஷ்ரியாவைத் தேடி வந்துள்ளது. அவரும் அதைத் தட்டாமல் ஏற்றுக் கொண்டுள்ளாராம். இதற்காக அவருக்குப் பெரும் சம்பளம் பேசப்பட்டுள்ளதாம்.

கடந்த ஒரு ஆண்டில் தெலுங்கில் அவர் ஆடப் போகும் நான்காவது குத்துப் பாட்டு இது என்கிறது டோலிவுட் ஸ்டேட்டிக்ஸ்.

துளசி என பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில் நயனதாராதான் நாயகி. வெங்கடேஷ் ஹீரோவாக நடிக்கிறார். பூபதி ஸ்ரீனிவாஸ் இயக்குகிறார். படம் கிட்டத்தட்ட முடியும் நிலைக்கு வந்து விட்டது. சில பாடல்களை மட்டுமே படமாக்க வேண்டியுள்ளதாம்.

வெளிநாடுகளுக்குப் போகாமல் ஹைதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியிலேயே ஷூட் செய்யவுள்ளனராம்.

நயனதாரா படத்தில் ஷ்ரியா குத்துப் பாட்டுக்கு ஆடுவதில் ஒரு விசேஷம் உள்ளது. ஷ்ரியா நாயகியாக நடித்த சிவாஜியில், நயனதாரா ஒரு பாட்டுக்கு ஆடியிருந்தார். இப்போது நயனதாரா படத்தில் ஷ்ரியா ஆடப் போகிறார்.

ஆனால் ஷ்ரியா இப்படி தெலுங்கில் குத்தாட்டம் ஆடுவதால் தமிழ்ப் படத் தயாரிப்பாளர்கள் அதிருப்தியாக உள்ளார்களாம். காரணம், தெலுங்கில் மட்டுமே குத்துப் பாட்டுக்கு ஆட சம்மதிக்கிறாராம் ஷ்ரியா. தமிழில் கேட்டால் பெரிய கும்பிடு போட்டு விடுகிறாராம். சமீபத்தில் இப்படி அவர் நிராகரித்து குத்துப் பாட்டு படம் வடிவேலுவின் இந்திரலோகத்தில் நா. அழகப்பன்.

ஏம்மா, ஏன் இப்படியெல்லாம் நடக்குது?!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil