»   »  'ஆபாசம்'- மன்னிப்பு கேட்டார் ஸ்ரேயா!

'ஆபாசம்'- மன்னிப்பு கேட்டார் ஸ்ரேயா!

Subscribe to Oneindia Tamil
Shreya with Karunanidhi and Rajini in Shivaji silver jubilee celebrations
ஆபாச உடையில் பொது நிகழ்ச்சிக்கு வந்ததற்காக இந்து மக்கள் கட்சி, முதல்வர் கருணாநிதியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.

கருணாநிதி, ரஜினி ஆகியோர் முன்னிலையில் நடந்த சிவாஜி படத்தின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஷ்ரேயா படுகவர்ச்சியான உடையில் வந்தார்.

மிகச் சிறிய பிராக் உடையில் வந்து சலசலப்பை ஏற்படுத்தினார். கால்கள் தொடை வரையும், மார்பகங்கள் தெரியும் வகையிலும் உைடயணிந்து வந்த ஸ்ரேயா தனது அழகை வெளியே காட்டுவதில் அதிக அக்கறை காட்டினார்.

போலீஸ் நடவடிக்கை இல்லை:

இந் நிலையில் ஷ்ரேயா மிக ஆபாச உடை அணிந்து வந்ததால், இளைஞர்களின் மனம் கெட காரணமாக அமைந்ததாகவும் எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி இந்து மக்கள் கட்சியை சேர்ந்த ராமமூர்த்தி என்பவர் அண்ணா சாலை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இந்த புகார் மனு தொடர்பாக அண்ணா சாலை போலீஸார் துணை கமிஷனர் ராமசுப்பிரமணி, உதவி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.

இதையடுத்து ஆபாச உடை பிரச்சனையில் நடிகை ஸ்ரேயா மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று போலீசார் முடிவு செய்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறுகையில், புகார் கொடுத்துள்ள ராமமூர்த்தி நடிகை ஸ்ரேயா ஆபாச உடை அணிந்து வந்ததை நேரில் பார்க்கவில்லை. டிவியிலும் பத்திரிகைகளில் வந்த செய்தி, படங்களைப் பார்த்துவிட்டுத்தான் புகார் கொடுத்துள்ளார்.

மேலும், நிர்வாணமாக வராத பட்சத்தில் எந்த விதமான உடை அணிவது என்பது அவரவர் சொந்த விருப்பமாகும். இதில் போலீசார் தலையிடவோ நடவடிக்கை எடுக்கவோ அதிகாரமில்லை என்றனர்.

மன்னிப்பு:

இந் நிலையில் நடிகை ஸ்ரேயா தான் அணிந்து வந்த உடைக்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக முதல்வர் கருணாநிதிக்கும் இந்து மக்கள் கட்சிக்கும் காவல்துறைக்கும் மன்னிப்பு கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் முன் துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் மிஷன் இஸ்தான்புல் என்ற இந்திப் படத்தின் சூட்டிங்கில் இருந்ததாகவும். அங்கிருந்து நேராக விமானத்தில் இறங்கி மேடைக்கு வந்ததாகவும், உடை மாற்றக்கூட அவகாசம் இல்லை என்றும் அதில் ஸ்ரேயா கூறியுள்ளார்.

இது குறித்து ஸ்ரேயா கூறுகையில், எனது உடையால் யாராவது மனம் புண்பட்டிருந்தால் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil