»   »  ரித்தீஷுடன் ஆடுவாரா ஷ்ரியா

ரித்தீஷுடன் ஆடுவாரா ஷ்ரியா

Subscribe to Oneindia Tamil
Shreya

'சேது வீரன்' ரித்தீஷ்குமார் நடிக்கும் நாயகன் படத்தில் ஒரு ஐட்டம் பாட்டுக்கு ஆட ஷ்ரியாவை அணுகியுள்ளனராம்.

அமைச்சர் சுப. தங்கவேலனின் பேரன்தான் ரித்தீஷ்குமார். இவரும் இப்போது தமிழ் சினிமாவில் ஒரு ஹீரோ. சின்னி ஜெயந்த்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ரித்தீஷ்குமார், தனது 2வது படத்தில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படத்தின் பெயர் நாயகன். ரமணாதான் இதில் ஹீரோவாக முதலில் புக் செய்யப்பட்டிருந்தார். 2வது நாயகனாகத்தான் ரித்தீஷ் சேர்க்கப்பட்டிருந்தார்.

ஆனால் இப்போது ரித்தீஷ் கேரக்டருக்கு வெயிட்டைக் கூட்டி விட்டார்களாம். கிட்டத்தட்ட ரித்தீஷ்தான் நாயகன் போல மாறியுள்ளதாம். ரமணாவும் படத்தில் இருக்கிறார்.

மேட்டர் அது அல்ல. இப்படத்தில் ஒரு ஐட்டம் பாட்டை வைக்கத் தீர்மானித்த படத்தின் இயக்குநரும், ரித்தீஷும், அதற்கு யாரை ஆட வைக்கலாம் என தீர்மானித்து சில முன்னணி நடிகைகளின் பெயரை ரெடி செய்து அவர்களை அணுகிப் பார்த்துள்ளனர்.

ஆனால் ரித்தீஷுடன் ஆட ஒருவரும் முன்வரவில்லையாம். இந்த நிலையில்தான் இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன், ஷ்ரியா ஒரு பாட்டுக்கு ஆடிய மேட்டர் காதில் வந்து விழுந்தது.

சந்தோஷமாகிப் போன அவர்கள், ஷ்ரியாவை அணுகியுள்ளனராம். பெரிய சம்பளம் தருவதாகவும் கூறியுள்ளனராம். இருந்தாலும் இதுவரை ஷ்ரியா தரப்பிலிருந்து ஒரு பதிலும் வரவில்லையாம்.

ஷ்ரியா தரப்பு இப்போது வேறு மாதிரியான கவலையில் உள்ளதாம். ஹாலிவுட்டில் நடிக்க புக் ஆகி விட்ட பின்னர் இதுபோன்று குத்துப் பாட்டுக்கு ஆட ஆரம்பித்தால் இமேஜ் கெட்டு விடுமே என்று கவலை தெரிவித்தார்களாம் நலம் விரும்பிகள்.

இதனால் குத்துப் பாட்டுக்கு குட்பை சொல்லி விடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம் ஷ்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil