»   »  கவர்ச்சியும், 'கந்தசாமி' ஷ்ரியாவும்!

கவர்ச்சியும், 'கந்தசாமி' ஷ்ரியாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil


கிளாமராக டிரஸ் போடுவது எனக்கு பொருத்தமாக இருக்கிறது. பொது இடங்களுக்கு நான் கிளாமராக டிரஸ் அணிந்தபடிதான் வருவேன். இது மற்றவர்களுக்கு இடையூறாக இருப்பது குறித்து எனக்குக் கவலை இல்லை என்று கூறி கவர்ச்சி விரும்பிகளின் வயிற்றில் கலர் ஊற்றியுள்ளார் ஷ்ரியா.

Click here for more images

படத்தில் நடிப்பது போலவே பொது நிகழ்ச்சிகளுக்கும் புல்லரிக்க வைக்கும் கவர்ச்சி டிரஸ்ஸில்தான் வருகிறார் ஷ்ரியா.

வழக்கமாக கிளாமரான டிரஸ்ஸில் வருவதில், திரிஷாதான் முன்னணியில் இருந்தார். ஆனால் அவரைத் தூக்கிச் சாப்பிடும் வகையில் கலக்கலாக டிரஸ் அணிந்து வந்து கொண்டிருக்கிறார் ஷ்ரியா.

சமீபத்தில் நடந்த கந்தசாமி படத் தொடக்க விழாவுக்கு அவர் போட்டு வந்திருந்த டிரஸ்ஸைப் பார்த்து பலருக்கும் அடி வயிற்றைக் கலக்கி விட்டது. அந்த அளவுக்கு முன்னழகுப் பிரதேசத்தின் முக்கால்வாசி ஏரியாவை முழுக்கக் காட்டியபடி வந்திருந்தார் ஷ்ரியா.

இதுகுறித்து ஷ்ரியாவிடம் சிலர் கிசுகிசுத்துள்ளனர். கொஞ்சம் மூடலாக வரக் கூடாது, பார்ப்பவர்களுக்கு மூடு ஏறுகிறதே என்று அவர்கள் கூற, அவர்களிடம், நான் எப்படி டிரஸ் போட்டால் மற்றவர்களுக்கு என்ன கவலை. எனக்கு கவர்ச்சியாக டிரஸ் போட்டால் பொருத்தமாக இருக்கிறது, எனக்கும் பிடித்துள்ளது.

நான் எனது விருப்பப்படிதான் டிரஸ் போட்டுக் கொண்டு வர முடியும். மற்றவர்ளுக்காக நான் டிரஸ் போட முடியாது. நான் இப்படித்தான் என்று கூறி கேட்டவர்களை வெளிர வைத்துள்ளார்.

அத்தோடு விடாமல் கல்லூரி மாணவிகள் போட்டு வரும் டிரஸ்ஸை விட எனது டிரஸ் நன்றாகத்தான் இருக்கிறது என்று கல்லூரி மாணவிகளையும் வாரியிருக்கிறார்.

கந்தர் அலங்காரம் கேள்விப்பட்டுள்ளோம். இது ஷ்ரியாவின் 'கந்தரகோலம்' போல!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil