Just In
- 7 hrs ago
வெங்கட் பிரபுவின் ‘லைவ் டெலிகாஸ்ட் ‘ வெப் சீரிஸ்…ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு !
- 7 hrs ago
விமல் நடிக்கும் படத்தின் பூஜை இன்று இனிதே துவங்கியது !
- 9 hrs ago
வீரபாண்டிய கட்டபொம்மன் படத்தில் ஜாக்சன் துரையாக நடித்த சிஆர் பார்த்திபன் காலமானார்!
- 10 hrs ago
செம்ம.. வரும் நவம்பரில் ரிலீஸாகிறது ரஜினியின் அண்ணாத்த படம்.. சன் பிக்சர்ஸ் அறிவிப்பு!
Don't Miss!
- News
சாலமன் பாப்பையா முதல் 2 ரூபாய் டாக்டர், சாந்தி கியர்ஸ் சுப்பிரமணியன் ஆகியோருக்கு பத்ம ஸ்ரீ விருது
- Automobiles
பிரம்மாண்ட சாதனை... இந்தியாவில் வெறும் 17 மாதங்களில் 2 லட்சம் கார்களை விற்பனை செய்தது கியா...
- Finance
5% சரிவில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள்.. காலாண்டு முடிவின் எதிரொலி..!
- Sports
ஐபிஎல் ஏலம் சென்னையில நடக்குதாம்... பிப். 18 அல்லது 19ல் நடத்த பிசிசிஐ திட்டமிட்டிருக்கு!
- Lifestyle
மைதா போண்டா
- Education
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் சென்னை உயர்நீதிமன்ற அலுவலகத்தில் வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஸ்ரேயாவுக்கு டும் டும் டும்... மாப்பிள்ளை யார் தெரியுமா?

சென்னை : 17 ஆண்டுகளுக்கு முன்பு திரையுலகில் அறிமுகமான ஸ்ரேயா, தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
சில தோல்விப் படங்களால் முன்னணி ஹீரோக்களின் படங்களில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தவர் தற்போது அரவிந்த்சாமியுடன் நரகாசூரன்' திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில், ஸ்ரேயாவுக்கும் அவரது ரஷ்ய காதலர் ஆண்ட்ரே கோஷ்சீவுக்கும் மார்ச் மாதம் உதயபூரில் திருமணம் நடைபெற உள்ளது உறுதியாகி இருக்கிறது.

ஸ்ரேயா சரண்
2001-ம் ஆண்டு வெளிவந்த 'இஷ்டம்' தெலுங்குப் படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் ஸ்ரேயா. ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்து 2007-ல் வெளிவந்த 'சிவாஜி' படம் நல்ல வெற்றி பெற்றதால் டாப் நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார்.

அரவிந்த்சாமி ஜோடியாக
ஸ்ரேயா நடித்து பின்னர் வெளிவந்த சில படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. இதனால் தமிழ்ப் படங்களில் அவர் நடிப்பது மிகவும் குறைந்தது. தெலுங்கில் 'காயத்ரி' எனும் படத்தைத் தயாரித்து நடித்தார். தமிழில் அரவிந்த்சாமி ஜோடியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் நடித்துள்ள 'நரகாசூரன்' படமும் வெளிவர உள்ளது.

மார்ச் மாதம் திருமணம்
இதற்கிடையே, ஸ்ரேயாவுக்கும் அவருடைய ரஷ்ய காதலருக்கும் மார்ச் மாதம் திருமணம் நடைபெற உள்ளதாக தெலுங்கு திரையுலக வட்டாரத்தில் தகவல் பரவியது. ஆனால், தனக்கு தற்போது திருமணம் இல்லை என மறுத்துவந்தார் ஸ்ரேயா.

மாப்பிள்ளை
இந்த நிலையில், நடிகை ஸ்ரேயாவின் திருமணம் உறுதியாகி இருக்கிறது. அவர் ரஷ்ய விளையாட்டு வீரரும் தொழிலதிபருமான ஆண்ட்ரே கோஷ்சீவ் (Andrei Koscheev) என்பவரைக் காதலித்து வந்தார். இவர்களின் திருமணம் மார்ச் மாதம் 17, 18, 19 என மூன்று நாட்கள் உதயபூரில் நடக்கவிருக்கிறது.

35 வயது
திருமணத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றனவாம். ஸ்ரேயா தனது நெருங்கிய நண்பர்களையும், திரையுலகினரையும் மட்டுமே திருமணத்திற்கு அழைக்கவிருக்கிறாராம். 35 வயதாகும் ஸ்ரேயா 17 வருடங்களாக திரையுலகில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.