»   »  சொந்தக் குரல் ஷ்ரியா

சொந்தக் குரல் ஷ்ரியா

Subscribe to Oneindia Tamil


இந்தி சிவாஜியில், நாயகி ஷ்ரியா தனது சொந்தக் குரலில் வசனம் பேசியுள்ளார்.

Click here for more images

சிவாஜியில் நடித்த பிறகு ஷ்ரியாவுக்கு தமிழ், தெலுங்கு, இந்தியில் ஏராளமான பட வாய்ப்புகள். லீடிங் ஸ்டார்களுடன் டைம் டேபிள் போட்டு ஷூட்டிங்குக்குப் போய்க் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் நடித்த சிவாஜி படத்துக்கு டப்பிங் பேசவும் நேரம் ஒதுக்கியுள்ளார். தமிழில் ஷ்ரியாவுக்கு, நடிகை கனிகா குரல் கொடுத்திருந்தார்.

இந்தியில் தானே டப்பிங் பேசியுள்ளார். தாய் மொழி இந்தி என்பதால் இதை தானே விரும்பி ஏற்றுப் பேசியுள்ளாராம்.

படத்தில் இந்தி ரசிகர்களுக்ேகற்றவாறு சில திருத்தங்களைச் செய்து ெகாடுத்திருக்கிறாராம் ஷங்கர். குறிப்பகா அதிரடிதான் பாட்டில் சில மாற்றங்களைச் செய்துள்ளார்.

வட இந்தியாவிலும் தமிழ் சிவாஜி சக்கை போடு போட்டது. இதுவரை எந்த்த தமிழ்ப் படத்திற்கும் கிடைத்திராத வரவேற்பு கிடைத்ததால்தான் அதை இந்தியில் டப் செய்ய ஏவி.எம். நிறுவனம் திட்டமிட்டது.

இந்தி சிவாஜியை தீபாவளிக்குத் திரைக்குக் கொண்டு வருகிறார்கள். இப்படத்தையும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். கிட்டத்தட்ட 400 தியேட்டர்களில் ரிலீஸாகிறாராம் இந்தி பாஸ்!

Read more about: shriya
Please Wait while comments are loading...