»   »  2 குழந்தைகளின் தந்தையான கிரிக்கெட் வீரர் பிராவோ, நடிகை ஸ்ரேயா காதல்?

2 குழந்தைகளின் தந்தையான கிரிக்கெட் வீரர் பிராவோ, நடிகை ஸ்ரேயா காதல்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: நடிகை ஸ்ரேயாவும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவும் காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது.

எனக்கு 20 உனக்கு 18 படம் மூலம் கோலிவுட் வந்தவர் ஸ்ரேயா சரண். ஜெயம் ரவியுடன் மழை, தனுஷுடன் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினிகாந்துடன் சிவாஜி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்தவர்.

இந்தி த்ரிஷ்யம்

இந்தி த்ரிஷ்யம்

த்ரிஷ்யம் படத்தின் இந்தி ரீமேக்கில் கவுதமியின் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஸ்ரேயா. இரண்டு வளர்ந்த பெண் குழந்தைகளுக்கு தாயாக நடித்தார். மார்க்கெட் படுத்துவிட்டதால் சீனியர் கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார்.

சிம்பு

சிம்பு

ஸ்ரேயா தற்போது சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அவர் சிம்புவுக்கு லிப் டூ லிப் கொடுக்கும் காட்சி ரசிகர்களை வியக்க வைத்துள்ளது.

பிராவோ

பிராவோ

34 வயதாகும் ஸ்ரேயாவுக்கு இன்னும் திருமணமாகவில்லை. இந்நிலையில் அவரும், மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ட்வெய்ன் பிராவோவும் மும்பையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு ஜோடியாக சென்று சாப்பிட்டுள்ளனர்.

ஸ்ரேயா

ஸ்ரேயா

இருவரும் சொல்லி வைத்தது போன்று கருப்பு நிற உடை அணிந்திருந்தனர். ஹோட்டலில் இருந்து வெளியே வந்த ஸ்ரேயா பிராவோவுடன் சேர்ந்து புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க மறுத்துவிட்டார்.

காதல்

காதல்

பிரோவா புகைப்படத்திற்கு கூலாக போஸ் கொடுக்க ஸ்ரேயாவோ விருட்டென்று கிளம்பிச் சென்றுவிட்டார். அவரின் நடவடிக்கையால் தான் அவர் பிராவோவை காதலிப்பதாக பேச்சு கிளம்பியுள்ளது. 33 வயதாகும் பிராவோவுக்கு மகனும், மகளும் உள்ளனர்.

Read more about: shriya saran, love, காதல்
English summary
Buzz is that actress Shriya Saran and West Indies cricketer Dwayne Bravo are in love.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil