For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  'ஹாஸ்பிட்டல்ல இருந்தா கொரோனா பாதிக்கும்..' டாக்டர் சொன்னதால் தனிமைப்படுத்திக் கொண்ட பிரபல ஹீரோயின்!

  By
  |

  சென்னை: மருத்துவமனையில் இருந்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் என்று டாக்டர் சொன்னதால் வீட்டுக்குள் தனிமைப்படுத்திக் கொண்டதாக, பிரபல ஹீரோயின் தெரிவித்துள்ளார்.

  Quarantine Paridhabangal | Shriya | Kushbhu | Shilpa shetty | Lock Down

  பிரபல நடிகை ஸ்ரேயா, ரஷ்ய தொழிலதிபர் ஆண்ட்ரி கோஸ்சீவ் என்பவரை காதலித்து கடந்த சில வருடங்களுக்கு முன், திருமணம் செய்து கொண்டார்.

  திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்துவருகிறார் ஸ்ரேயா.

  வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!வேற லெவல் மாறா.. சூர்யாவின் சூப்பர் ஹிட் தள்ளிப் போகுதே.. டிரெண்டாகும் சூரரைப் போற்று மேக்கிங்!

  பார்சிலோனா

  பார்சிலோனா

  இந்த கொரோனா காலகட்டத்தில் தனது கணவருடன் ஸ்பெயினில் உள்ள பார்சிலோனாவில் வசித்து வருகிறார். உலகம் முழுவதும் பரவிய கொரொனாவால், அதிகம் பாதிப்புக்குள்ளான நாடுகளில் ஒன்று ஸ்பெயின். அமெரிக்கா, இத்தாலியை அடுத்து அங்கும் ஆயிரக்கணக்கானோர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். இதனால் சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

  திருமண நாள்

  திருமண நாள்

  இதற்கிடையே பார்சிலோனாவில் இருந்து தனது கணவருடன் டான்ஸ் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஸ்ரேயா, கொரோனாவால் அவரும் அவர் கணவரும் எப்படி பாதிக்கப்பட்டார்கள் என்பதைத் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, எங்கள் திருமண நாளுக்காக நாங்கள் டின்னருக்கு ரெஸ்டாரென்ட் செல்ல முன் பதிவு செய்திருந்தோம்.

  போலீஸ் கட்டுப்பாடு

  போலீஸ் கட்டுப்பாடு

  அதன்படி சென்றால், மூடியிருந்தது. பிறகு அக்கம் பக்கம் பார்த்தால் கடைகள் அனைத்தும் முடப்பட்டிருந்தன. பிறகுதான் தீவிரம் புரிந்தது. அடுத்தடுத்த நாட்களில் ஸ்பெயின் லாக்டவுன் செய்யப்பட்டது. அதற்கு பிறகு எல்லாமே மாறிவிட்டன. ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே வெளியே வரலாம், அதுவும் முக்கியமான தேவை என்றால் மட்டுமே என்று போலீஸ் கட்டுப்பாடு விதித்தது.

  இருமல் காய்ச்சல்

  இருமல் காய்ச்சல்

  ஒருமுறை நானும் கணவர் ஆண்ட்ரியும் வெளியே சென்றோம். போலீசார் தடுத்தனர். இருவருமே வெவ்வேறு நிறங்களில் இருந்ததால் எங்களை தெரியாமல் விட்டுவிட்டனர். இந்த நிலைமை, ஒரு கட்டத்தில் மோசமாகிவிட்டது. ஆண்ட்ரிக்கு இருமலும் காய்ச்சலும் வரத் தொடங்கியது. மருத்துவமனைக்குச் சென்றோம். ஆனால் மருத்துவர்கள் உடனடியாக வீட்டுக்கு செல்லுமாறு கூறினர்.

  சமூக விலகல்

  சமூக விலகல்

  அவருக்கு கோவிட் 19 பாதிப்பு இல்லை என்றாலும் இங்கிருந்தால் அது வந்துவிடும், உடனடியாக வீட்டுக்குச் செல்லுங்கள் என்றனர். பிறகு இருவரும் வீட்டுக்கு வந்து தனிமைப்படுத்திக் கொண்டோம். தனித்தனி பெட்ரூமில் தூங்கினோம். சமூக விலகலை கடைப்பிடித்தோம். பிறகு இப்போது நன்றாக இருக்கிறோம்.

  வீடியோ கால்

  வீடியோ கால்

  யோகா, மெடிடேசன், சமையல், படிப்பு, படங்கள் பார்ப்பது என என் நேரம் இங்கு கழிகிறது. என் பெற்றோர் மும்பையில் இருக்கின்றனர். அவர்களுடன் வீடியோ காலில் பேசிக்கொள்கிறேன். எப்போது அங்கு திரும்புவேன் என்று தெரியவில்லை. இந்த வைரஸ் மொத்த வாழ்க்கையையும் மாற்றி இருக்கிறது. இந்த நிலை விரைவில் மாறும் என்று கூறியுள்ளார், ஸ்ரேயா.

  சிவாஜி ஹீரோயின்

  சிவாஜி ஹீரோயின்

  நடிகை ஸ்ரேயா, தமிழில், ஜெயம் ரவி ஜோடியாக மழை, தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விக்ரமின் கந்தசாமி, ஜீவாவின் ரெளத்ரம் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். இந்தி, தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார். பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். அடுத்து தெலுங்கில் சில படங்களில் நடிக்க் இருக்கிறார்.

  English summary
  'How quickly Covid-19 turned our lives upside down', Shriya Saran explains lockdown experience in Barcelona.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X