Don't Miss!
- News
சங்கராந்தி கொண்டாட வந்துடுவேன்..தந்தையிடம் கூறிய சில நிமிடத்தில் பலியான ஏர் ஹோஸ்டஸ்..உருக்கமான தகவல்
- Sports
உலக கோப்பை ஹாக்கியில் ஷாக்.. ஜப்பான் செய்த ஏமாற்று வேலை.. கையும் களவுமாக சிக்கியது
- Finance
இந்தியா ரஷ்யா இடையில் 2023ல் சிறப்பான சம்பவம் இருக்கு..எஸ் & பி கொடுத்த செம அப்டேட்!
- Automobiles
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பிஎம்டபிள்யூ கார் விற்பனைக்கு வந்தது!! எக்ஸ்7 ஃபேஸ்லிஃப்ட்... விலை இவ்வளவா!
- Lifestyle
Budh Margi 2023: புதன் வக்ர நிவர்த்தியால் ஜனவரி 18 முதல் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை பிரகாசமா இருக்கும்..
- Technology
அட்டகாசமான அம்சங்களுடன் கம்மி விலையில் அறிமுகமான பிரபல நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்.!
- Travel
சென்னைக்குள் இப்படி ஒரு அழகிய கோயிலா – மன நிம்மதியை வழங்கும் மத்ஸ்ய நாராயணன் கோயில்!
- Education
பெட்ரோலிய கழகத்தில் ரூ.81 ஆயிரத்தில் பணி வாய்ப்பு...!
பெண் குழந்தை பிறந்த விஷயத்தையே இத்தனை நாட்களாய் மறைத்த நடிகை ஸ்ரேயா.. வைரலாகும் வீடியோ!
சென்னை: நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்த விஷயத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ரேயா இத்தனை நாட்கள் தனக்கு குழந்தை பிறந்த விஷயத்தையே மறைத்து வைத்திருப்பது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாக
சைத்தன்யா
படத்தின்
வீடியோ
பாடல்...
ரொமான்சில்
பின்னி
பெடலெடுக்கும்
ஹீரோ!
மகள் மற்றும் கணவருடன் இருக்கும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி உள்ளார் நடிகை ஸ்ரேயா.

தெலுங்கில் அறிமுகம்
கடந்த 2001ம் ஆண்டு வெளியான இஷ்டம் எனும் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வந்த ஸ்ரேயா தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால், அந்த படத்தில் திரிஷா ஹீரோயின் என்பதால், ஜெயம் ரவியின் மழை படம் தான் ஸ்ரேயாவுக்கு தமிழில் ஹீரோயின் அந்தஸ்த்தை அளித்தது.

சூப்பர்ஸ்டார் ஜோடி
தனுஷ் உடன் திருவிளையாடல் ஆரம்பம் படத்தில் நடித்த நடிகை ஸ்ரேயாவுக்கு அடுத்ததாக சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு ஜோடியாகும் ஜாக்பாட் அடித்தது. இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான சிவாஜி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து கலக்கினார் ஸ்ரேயா.

பான் இந்தியா நடிகை
சிவாஜி படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார் நடிகை ஸ்ரேயா. விஜய்யின் அழகிய தமிழ்மகன், விக்ரம் உடன் கந்தசாமி, விஷால் உடன் தோரணை மீண்டும் தனுஷ் உடன் குட்டி என பல படங்களில் நடித்து அசத்தினார். தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பான் இந்தியா நடிகையாக மாறினார் ஸ்ரேயா.

காதல் திருமணம்
கடந்த 2018ம் ஆண்டு ஆண்ட்ரே கொஸ்சீவ் எனும் வெளிநாட்டினரை காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகை ஸ்ரேயா. கணவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் லிப் லாக் அடித்த போட்டோக்களையும் போட்டு இணையத்தை சூடாக்கினார்.
பெண் குழந்தை
இந்நிலையில், நடிகை ஸ்ரேயா தனக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில் குழந்தை மற்றும் கணவருடன் இருக்கும் வீடியோவை ஷேர் செய்து உலகிற்கு அறிவித்துள்ளார். அந்த வீடியோவில் ஸ்ரேயாவின் மகள் நன்று வளர்ந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

மறைச்சிட்டீங்களே
கடந்த 2020ம் ஆண்டு உலகமே கொரோனாவில் வாடிக் கொண்டிருக்கும் போது தான் கருவுற்றேன் என்றும் எங்கள் வாழ்வில் அந்த சந்தோஷ தருணம் நடைபெற்று எங்களுக்கு தேவதை பிறந்தாள் என்றும் நடிகை ஸ்ரேயா தெரிவித்ததை பார்த்த ரசிகர்களும் பிரபலங்களும் இவ்வளவு நாளா குழந்தை பிறந்ததையே மறச்சிட்டீங்களே எனக் கேட்டு குழந்தையையும் தாயையும் வாழ்த்தி வருகின்றனர்.

ராஜமெளலி படம்
இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி உள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் ஸ்ரேயாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தி த்ரிஷ்யம் படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்திருந்த ஸ்ரேயா இந்த படத்திலும் அவருக்கு ஜோடியா? இல்லையா? என்பது வரும் ஜனவரி 7ம் தேதி படம் வெளியானதும் தெரிந்து விடும்.