40 பிளஸிலும் குறையாத கவர்ச்சி.. த்ரிஷ்யம் 2 டிரைலரை விட டிரெண்டான ஸ்ரேயாவின் ஹாட் பிக்ஸ்!
சென்னை: சீனியர் நடிகை ஆகிவிட்டாலும் தொடர்ந்து நடிகை ஸ்ரேயா பெரிய படங்களில் நடித்து வருகிறார்.
இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் கப்ஸா, த்ரிஷ்யம் 2 (இந்தி) உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
இந்த ஆண்டு ஆர்ஆர்ஆர் படத்தைத் தொடர்ந்து ஸ்ரேயாவின் நடிப்பில் கப்ஸா, த்ரிஷ்யம் 2 (இந்தி) உள்ளிட்ட படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.

எவர்க்ரீன் ஹாட்
மழை படத்தில் சொட்டும் மழையில் நனைந்து ஸ்ரேயா போட்ட நடனம், சிவாஜி படத்தில் வாஜி வாஜி பாடலுக்கு அவர் போட்ட கிளாமர் டான்ஸ் என அப்போது எப்படி கவர்ச்சி குயினாக வலம் வந்தாரோ இப்பவும் அதே அளவு கிளாமர் குறையாமல் போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார் நடிகை ஸ்ரேயா.

த்ரிஷ்யம் 2 டிரைலர்
இந்தியில் அஜய் தேவ்கன் உடன் இணைந்து த்ரிஷ்யம் படத்தில் நடித்த ஸ்ரேயா தற்போது த்ரிஷ்யம் 2 படத்திற்காகவும் அஜய் தேவ்கன் உடன் இணைந்து நடித்துள்ளார். இன்று அந்த படத்தின் ரீகால் டிரைலர் வெளியாகி இருந்தது. ஆனால், அது டிரெண்டானதை விட கருப்பு நிற கவர்ச்சி உடையில் ஸ்ரேயா வெளியிட்ட ஹாட் பிக்ஸ் தான் செம டிரெண்டாகி வருகிறது.

40 பிளஸ் ஆனாலும்
எப்பவுமே தான் ஒரு கிளாமர் குயின் என்பதை 40 பிளஸ் வயதிலும் கவர்ச்சிக்கு கொஞ்சமும் பஞ்சமும் வைக்காமல் இளம் நடிகைகளுக்கு செம டஃப் கொடுத்து வருகிறார் ஸ்ரேயா. வீட்டின் கிச்சன் செல்ஃபி போன்ற பகுதியில் அமர்ந்து கொண்டு அவர் கொடுத்துள்ள வித விதமான போஸ் புகைப்படங்கள் இணையத்தில் இன்ஸ்டன்ட்டாக டிரெண்டாகி விட்டது.

மகளுடன் பிகினி உடையில்
சமீபத்தில் தனது குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்றிருந்த நடிகை ஸ்ரேயா அங்கே தனது மகள் ராதாவுடன் பிகினி உடை அணிந்து பீச்சில் விளையாடும் போட்டோக்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து அனலை கூட்டி இருந்தார். இந்நிலையில், தற்போது அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.

பெரிய படங்களில் பிஸி
கன்னடத்தில் உருவாகி உள்ள காப்ஸா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரேயா. இந்த ஆண்டு வெளியான பிரம்மாண்டமான படமான ஆர்ஆர்ஆர் படத்திலும் அஜய் தேவ்கனுக்கு மனைவியாக நடித்திருந்தார். துல்கர் சல்மானின் அடுத்த பிரம்மாண்ட படமான கிங் ஆஃப் கோத்தா படத்திலும் ஸ்ரேயா நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











