»   »  அஜீத்துடன் ஷ்ரியா சமாதானம்?

அஜீத்துடன் ஷ்ரியா சமாதானம்?

Posted By:
Subscribe to Oneindia Tamil
Shreya
அஜீத்துடன் ஷ்ரியா சமாதானம்?

ராஜு சுந்தரம் படத்தில் அஜீத்துடன் இணைந்து நடிக்க இழுத்தடித்ததால் அந்தப் படத்திலிருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் ஷ்ரியா இப்போது அஜீத்துடன் சமாதானமாகி விட்டதாக தெரிகிறது. விரைவில் அஜீத்தை சந்தித்துப் பேசவுள்ளாராம் ஷ்ரியா.

பில்லாவை முடித்த பின்னர் அஜீத், ராஜு சுந்தரம் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ஷ்ரியாவைக் கேட்டனர். முதலில் கால்ஷீட் டைட் ஆக இருப்பதாகவும், 3 மாதங்கள் பொறுத்துக் கொண்டால் நடிக்க வருவதாகவும் கூறினார் ஷ்ரியா.

ஆனால் அத்தனை மாதங்கள் காத்திருக்க முடியாது என்று அஜீத் - ராஜு சுந்தரம் கூறி, வேறு நாயகியைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தனர். இந்த நிலையில் மீண்டும் படத்தில் நடிக்க விரும்புவதாக ஷ்ரியா கூறினார்.

ஆனால் ஷ்ரியா வேண்டாம் என அஜீத் விரும்பியதால் ராஜு சுந்தரம், ஷ்ரியா மீது ஆர்வம் காட்டவில்லை.

ஷ்ரியாவை அஜீத் விரும்பாததற்குக் காரணம், வடிவேலுவுடன் ஒரு பாடலுக்கு இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் ஆடியதால்தான் என்றும் ஒரு கருத்து நிலவியது.

இந்த நிலையில் அஜீத்தை, ஷ்ரியா சமாதானப்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் அவரை நேரில் சந்தித்துப் பேசவும் உள்ளாராம்.

ஷ்ரியாவின் இந்த திடீர் மாற்றத்திற்குக் காரணம், அவரது நெருங்கிய தோழியான திரிஷா கொடுத்த அட்வைஸ்தான் காரணம் என்கிறார்கள். இப்படத்தை மிஸ் பண்ணி விடாதே என்று திரிஷா கூறியதால்தான் அஜீத்துடன் எப்படியாவது ஜோடி சேர்ந்து விட தீர்மானித்தாராம் ஷ்ரியா.

இதையடுத்து உடனடியாக அஜீத்துக்குப் போன் செய்த அவர் முதலில் குழந்ைத பிறந்ததற்காக வாழ்த்து தெரிவித்தாராம். நேரில் சந்திக்க வேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்தாராம்.

ஷ்ரியாவின் அப்ரோச் அஜீத்துக்குப் பிடித்துப் போய் விட்டதாம். இதனால் கோபம் தணிந்து விட்டாராம்.

மேலும் அஜீத்தின் காட்பாதரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தும் சில அறிவுரைகளை வழங்கினார். நமக்குப் பிடிக்கிறதோ, இல்லையோ, மக்களுக்குப் பிடிக்கிறவர்களுடன் இணைந்து நடிப்பதற்கு நாம் தடை போடக் கூடாது என்று அட்வைஸ் செய்தாராம் ரஜினி.

கூட்டிக் கழித்துப் பார்த்த அஜீத், ஷ்ரியாவுடன் சமாதானமாகி விட்டாராம். அவருடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆட்சேபனை இல்லை என்றும் ராஜு சுந்தரத்திடம் கூறியுள்ளார். இதையடுத்து ராஜு சுந்தரமும் நிம்மதிப் பெருமூச்சு விட்டுள்ளார்.

எனவே அஜீத்தின் அடுத்த படத்தில் ஷ்ரியா இணைவது உறுதியாகி விட்டது. பிப்ரவரியில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil