»   »  குத்தாட்டம்- ஷ்ரியாவின் புது முடிவு!

குத்தாட்டம்- ஷ்ரியாவின் புது முடிவு!

Subscribe to Oneindia Tamil
Shreya
இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படத்தில் வடிவேலுவுடன் ஒரு பாட்டுக்கு ஆடியுள்ள ஷ்ரியா, அந்தப் பாட்டுக்குக் கிடைக்கும் வரவேற்பைப் பொறுத்து தொடர்ந்து குத்தாட்டங்களில் ஆடுவது குறித்து முடிவெடுக்கவுள்ளாராம்.

மழை படம் ஷ்ரியாவுக்கு நல்ல அறிமுகம் கொடுத்தது என்றால், சிவாஜி அவரை சூப்பர் ஹீரோயினாக மாற்றியது. இதைத் தொடர்ந்து பல புதுப் படங்களில் மளமளவென புக் ஆனார் ஷ்ரியா.

ஆனால் யாரும் எதிர்பாராத வகையில், வடிவேலுவுடன் ஒரு குத்துப் பாட்டுக்கு ஆட அவர் சம்மதித்தபோது திரையுலகமே ஆச்சரியப்பட்டுப் போனது. குறிப்பாக பல ஹீரோக்கள் கடுப்பாகி விட்டார்களாம். இதை வடிவேலுவே தனது வாயால் சமீபத்தில் கூறினார்.

வடிவேலுவுடன் குத்துப் பாட்டுக்கு ஆடிய ஒரே காரணத்திற்காக அவரை சில ஹீரோக்கள் தங்களுடைய படங்களில் ஜோடி சேர்க்க முடியாது என்ற கூறிய விவகாரமும் நடந்துள்ளது.

இந்த நிலையில் மேலும் பல படங்களில் குத்தாட்டம் ஆட ஷ்ரியாவுக்கு அழைப்பு வந்துள்ளதாம். இருந்தாலும் அவற்றை உடனடியாக ஒத்துக் கொள்ளாமல் பென்டிங்கில் வைத்துள்ளாராம் ஷ்ரியா.

இந்திரலோகத்தில் நா. அழகப்பன் படம் வரட்டும். தனது குத்தாட்டத்திற்கு ரசிகர்களிடையே என்ன மாதிரியான வரவேற்பு கிடைக்கிறது என்பதைப் பார்த்த பின்னர் தொடர்ந்து குத்தாட்டத்தை தொடருவது குறித்து முடிவெடுக்கவுள்ளாராம் ஷ்ரியா.

தங்களது படங்களில் குத்தாட்டம் ஆட ஷ்ரியா சம்மதித்தால் பெரும் தொகையைக் கொடுப்பதற்கும் சிலர் தயாராக உள்ளனராம். இதனால்தான் இந்த முடிவை எடுத்துள்ளாராம் ஷ்ரியா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil