»   »  ஸ்ருதி ஹாஸன் யாரைப் பற்றியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை! - பிஆர்ஓ அறிக்கை

ஸ்ருதி ஹாஸன் யாரைப் பற்றியும் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை! - பிஆர்ஓ அறிக்கை

Posted By:
Subscribe to Oneindia Tamil

எப்போதும் இல்லாத அளவுக்கு அறிக்கை மயமாக உள்ளது கமல் குடும்பத்திலிருந்து.

கமலை விட்டுப் பிரிவதாக முதலில் கவுதமி அறிக்கைவிட்டார். அந்த அறிக்கைக்கு ஏகப்பட்ட விளக்கங்களுடன் செய்திகள் வெளியாகின.

Shruthi Hassan's latest official statement

அடுத்து கமலின் பிஆர்ஓ ஒரு அறிக்கையை சமூக வலைத் தளங்களில் அனுப்ப, அதை சில மணி நேரங்களில் கமல் மறுக்க, அடுத்து ஸ்ருதி ஹாசனுடைய செய்தி தொடர்பாளர் ஒரு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், "யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை பற்றியும், அவர்களுடைய முடிவுகளை பற்றியும் ஸ்ருதி எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை....அவரை (ஸ்ருதியை) பொறுத்தவரை தன்னுடைய பெற்றோர், சகோதரி என தன்னுடைய குடும்பத்தின் மேல் அவர் வைத்திருக்கும் அன்பும், மரியாதையும் மட்டும் தான் பிரதானம்...," என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
In a statement actress Shruthi Hassan's PRO says that Shruti has never commented on anyone's personal life and their decisions. "For her, what matters most is standing by, loving and respecting her family - her parents and her sister, no matter what", he added.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil