»   »  ரொம்ப ஓட்டாதீங்க... படம் வந்ததும் பாத்துட்டு பேசுங்க!- ஸ்ருதி ஹாஸன்

ரொம்ப ஓட்டாதீங்க... படம் வந்ததும் பாத்துட்டு பேசுங்க!- ஸ்ருதி ஹாஸன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

ப்ரேமம் தெலுங்கு ரீமேக்கின் டீசர்தான் இப்போது சமூக வலைத் தளங்களின் கேலிப் பொருள்.

மலையாளத்தில் வந்த ப்ரேமம் படத்தை அத்தனை பேரும் வயசு வித்தியாசமின்றி கொண்டாடினார்கள். அந்தப் படத்தை தமிழப்படுத்த சிலர் முயன்றபோது, 'படுத்த வேண்டாம்... விட்டுடுங்க' என்று சினிமாக்காரர்களே எச்சரிக்கும் அளவுக்கு அந்தப் படத்தை நேசித்தனர்.

Shruthi Hassan's request to trollers

ஆனால் தெலுங்குக்காரர்கள் அப்படியா... ஒரு கை பார்த்துடுவோம் என்று ப்ரேமத்தை தெலுங்குப் படுத்தி வருகிறார்கள். அதன் டீசர் இரு தினங்களுக்கு முன் வெளியாக, சமூக வலைத் தளங்கள் களேபரமாகிவிட்டன.

படு இயல்பான மலர் டீச்சர் வேடத்துக்கு ஸ்ருதிஹாஸனின் மேக்கப் முகம் சற்றும் பொருத்தமாக இல்லை என்றும், அவரது நடிப்பும் ரொம்ப செயற்கையாக இருப்பதாகவும் கமெண்ட் அடித்துள்ளனர்.

அதுமட்டுமல்ல, வடிவேலு காமெடியை அந்த டீசருடன் மிக்ஸ் பண்ணி சிலர் போட்டிருக்கும் கிண்டல் பதிவுகள் செம்மையாகப் போகின்றன.

இதையெல்லாம் பார்த்து ஸ்ருதியே ஒருவழியாகிவிட்டார். இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கும், வலைத் தளங்களில் தன்னை கிண்டலடிப்போருக்கும் ஒரு வேண்டுதல் வைத்திருக்கிறார்.

அதில், "மலர் டீச்சரோடு தயவு செய்து என்னை ஒப்பிடாதீர்கள். ஒரிஜினலை மறந்துவிட்டு நான் நடித்துள்ள படத்தைப் பார்த்து விமர்சனம் பண்ணுங்கள். மக்கள் படத்தைப் பார்ப்பதற்கு முன் ஒரு அபிப்பிராயத்தை உண்டாக்க வேண்டாம்.. ப்ளீஸ்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அப்படியெல்லாம் சுலபத்தில் விட்டுவிடக் கூடியவர்களா நம்மாளுங்க!

English summary
Actress Shruthi Hassan has requested trollers not to troll the teaser of Premam Telugu remake

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil