»   »  ரஜினி சார் அரசியலுக்கு வரணும்.. சொல்வது கமல் பொண்ணு!

ரஜினி சார் அரசியலுக்கு வரணும்.. சொல்வது கமல் பொண்ணு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தந்தை கமல் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தான் பார்ப்பதில்லை என்றும், ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் நடிகை ஸ்ருதி ஹாஸன் கூறியுள்ளார்.

சமீபத்தில் ஸ்ருதி ஹாஸன் அளித்த பேட்டியில், "யார் சிபாரிசிலும் நான் நடிகை ஆகவில்லை. என் சுய முயற்சிதான்.

அப்பா சாதனையில் ஒரு சதவீதம் கூட நான் இதுவரை சாதிக்கவில்லை.

பாதுகாப்பில்லை

பாதுகாப்பில்லை

இன்றைய சூழ்நிலையில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. நமது சமூக அமைப்பு அப்படி. காரணம் ஆண்களுக்கு தான் நமது நாட்டில் மரியாதை அதிகம். ஆண்குழந்தை பிறந்தால் கொண்டாடுவார்கள். பெண் குழந்தை பிறந்தால் கொண்டாட்டம் இல்லை.

எனக்கு குழந்தை பிறந்தால்

எனக்கு குழந்தை பிறந்தால்

ஆனால் எங்கள் வீட்டில் அப்படி அல்ல. எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தால், நான் தான் என் குழந்தைக்கு பெண்களை மதிக்க கற்றுக்கொடுக்க வேண்டும்.

நான் தமிழ்ப் பெண்

நான் தமிழ்ப் பெண்

நான் ஒரு தமிழ் பெண் என்பதில் பெருமைப்படுகிறேன். தமிழ் நாட்டையோ, தமிழர்களையோ யார் குறை சொன்னாலும் அவர்களை ஒரு வழி பண்ணிடுவேன். மும்பையில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லா மாநிலங்களையும் சேர்த்து ‘மதராசி' என்று கிண்டல் செய்வது போல சிலர் பேசுவது உண்டு. அவர்களுக்கு நான் தமிழ்நாட்டை பற்றி வகுப்பு எடுப்பேன்.

பிக் பாஸ் பார்க்கல

பிக் பாஸ் பார்க்கல

அப்பா நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியை நான் இன்னும் பாக்கல. நேரம் இல்லை. சீக்கிரம் பார்ப்பேன்.

ரஜினி அரசியல்

ரஜினி அரசியல்

ரஜினி சார் கண்டிப்பா அரசியலுக்கு வரணும்னு எதிர்ப்பார்க்கிறேன். அவரது வருகை பெரிய மாற்றத்தை உண்டாக்கும். இந்தத் துறைக்கும் பெரிய மரியாதையைத் தரும்," என்றார்.

English summary
Actress Shruthi Hassan is welcoming Rajinikanth to politics.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil