பல மாதங்களுக்கு பிறகு தங்கையை பார்த்த ஸ்ருதி...வைரலாகும் உருக்கமான பதிவு
சென்னை : கமலின் இரண்டு மகள்களும் அவரைப் போலவே குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமாகி, சினிமாவில் நடிப்பு, இசை, பாட்டு என பல பிரிவுகளில் அசத்தி வருகின்றனர். தொடர்ந்து தங்களின் திறமைகளை நிரூபித்து வருகின்றனர்.

கடந்த வாரம் ஐதராபாத்தில் நடந்த சைமா விருது வழங்கும் விழாவில் இருவரும் படு கிளாமரான உடையில் வந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தனர். அப்போது அக்கா - தங்கை இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்கள் இணையத்தில் செம வைரலாகி வருகின்றன. அதற்கு காரணம் இருவரின் அழகு மட்டுமல்ல, ஸ்ருதி ஹாசன் பதிவிட்ட பதிவும் தான்.
ஸ்ருதி ஹாசனும், அவரது தங்கை அக்ஷரா ஹாசனும் சிறு வயதில் இருந்தே ரொம்ப நெருக்கம். இதுவரை ஒருவரை ஒருவர் பிரிந்தது இல்லையாம். ஆனால் ஸ்ருதி ஹாசன் தனது காதலருடன் மும்பையில் வசித்து வந்ததால் கொரோனா லாக்டவுன் காரணமாக ஓராண்டிற்கும் மேலாக இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லையாம்.
ஐதராபாத்தில் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள வந்த போது தான் ஸ்ருதியும், அக்ஷராவும் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததாம். அப்போது இருவரும் இணைந்து பல ஃபோட்டோக்கள் எடுத்துக் கொண்டனர். இந்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ஸ்ருதி, உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், உங்களுக்கு சகோதரி இருந்தால் இதை பற்றி அதிகம் சொல்ல வேண்டியதில்லை. எங்களது வேலை காரணமாக ஊரடங்கு காலம் முழுவதும் நாங்கள் சந்திக்கவே இல்லை. அதனால் இந்த பயணம் எங்கள் இருவருக்குமே ரொம்ப ஸ்பெஷல் என குறிப்பிட்டுள்ளார்.
சுகாசினி மணிரத்னம், ராணா டகுபதி ஆகியோருடனும் நேரத்தை செலவிட்ட இந்த சகோதரிகள், அவர்களுடன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோக்களையும் பகிர்ந்துள்ளனர். இருவருமே தங்களின் சர்ப்ரைஸ் ஃபோட்டோக்களை பலருடன் பகிர்ந்துள்ளனர்.

ஸ்ருதி தற்போது பிரஷாந்த் நீல் இயக்கும் பிரம்மாண்ட பான் இந்தியன் படமான சாலரில் பிரபாஷுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அக்ஷரா, நவீன் இயக்கம் அக்னி சிறகுகள் படத்தில் விஜய் ஆன்டனி மற்றும் அருண் விஜய்யுடன் முதல் முறையாக இணைந்து நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











