»   »  ஹீரோயின்

ஹீரோயின்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீ படத்தில் ஸ்ருதிகாவின் நடிப்பைப் பார்த்து வியந்து போன டைரக்டர் கே.பாலசந்தர் அவரை தனது அடுத்த படத்திற்கு புக் செய்து விட்டார்.

மறைந்த காமடி ஆக்டர் தேங்காய் சீனிவாசனின் பேத்திதான் இந்த ஸ்ருதிகா. தாத்தாவைப் போலவே பூணைக் கண்ணுடன், கிறங்கடிக்கும் அழகுடன்காணப்படும் ஸ்ருதிகா ஸ்ரீ படத்தில் அறிமுகமாகிறார். அதில் சூர்யாவுடன் ஜோடி சேர்ந்துள்ளார்.

ஸ்ரீ படம் இன்னும் வெளியாகவில்லை. ஆனால், படத்தில் பிரிவியூவைப் பார்த்த டைரக்டர் கே.பாலச்சந்தர், ஸ்ருதிகாவின் நடிப்பில் அசந்து விட்டாராம்.அழகும், நடிப்பும் கூடிய ஸ்ருதிகாவை தனது அடுத்தத் தயாரிப்பான ஆல்பம் படத்தில் நடிக்க உடனடியாக புக் செய்து விட்டார்.

ஸ்ரீயில் காயத்ரி ஜெயராமும் நடிக்க டபுள் ஹூரோயின்களில் ஒருவராக நடித்த ஸ்ருத்திகா இப்போது ஆல்பம் படத்தில் சோலோ ஹீரோயினாகிவிட்டார்.

சான்ஸ் வந்தா, இப்படி வரணும்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil