»   »  இது நம்ம ஆளு... அதெல்லாம் வதந்தி... நம்பாதீங்க... ஸ்ருதி விளக்கம்

இது நம்ம ஆளு... அதெல்லாம் வதந்தி... நம்பாதீங்க... ஸ்ருதி விளக்கம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இது நம்ம ஆளு படத்தில் தான் பாடல் பாடியது உண்மை தான், ஆனால் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியதாக வெளியான தகவல்கள் உண்மையில்லை என நடிகை ஸ்ருதி விளக்கம் அளித்துள்ளார்.

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடி சேர்ந்து நடித்துள்ள படம் இது நம்ம ஆளு. காதல் முறிவிற்குப் பின் இருவரும் ஜோடி சேர்ந்துள்ள படம் இது என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

சிம்புவின் மற்ற படங்களைப் போலவே, தயாராகி நீண்ட நாட்களுக்குப் பின் அடுத்த மாதம் இப்படம் ரிலீசாக இருக்கிறது.

குத்துப் பாடல்கள்...

குத்துப் பாடல்கள்...

இப்படத்தில் இன்னும் இரண்டு குத்துப் பாடல்களைச் சேர்க்க சிம்பு தரப்பு விரும்புவதாகவும், ஆனால் அவற்றிற்கு தேதிகள் ஒதுக்க நயன்தாரா மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது.

வீணான கால்ஷீட்...

வீணான கால்ஷீட்...

ஏற்கனவே நயன்தாரா கொடுத்த தேதிகளை படக்குழு வீணடித்து விட்டதாக இயக்குநர் பாண்டிராஜூம் தெரிவித்திருந்தார்.

ஸ்ருதி...

ஸ்ருதி...

இந்தச் சூழ்நிலையில், இது நம்ம ஆளு படத்தில் நயன்தாராவிற்குப் பதில் ஸ்ருதி அந்தப் பாடலில் ஆடியிருப்பதாக தகவல்கள் உலா வந்தன.

வதந்தி...

வதந்தி...

ஆனால், அவை அனைத்தும் வெறும் வதந்தி தான் என ஸ்ருதி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

பாடியது உண்மை...

பாடியது உண்மை...

அதாவது, கடந்தாண்டு இப்படத்திற்கென தான் பாடல் பாடியது உண்மை தான் என்றும், ஆனால் அப்படத்தில் தான் பாடல் எதிலும் தோன்றி நடனம் ஆடவில்லை என்றும் ஸ்ருதி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறளரசன்...

குறளரசன்...

இப்படத்தின் மூலம் சிம்புவின் தம்பியான குறளரசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
There was a rumour online recently that Shruti Haasan, who has crooned a song for Idhu Namma Aalu, which stars Simbu and Nayanthara in the lead, will also be seen shaking a leg with Simbu for the special number in the film.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil